கள்ளிக்காடு அகத்தீஸ்வரர் சிவன் கோயில்
முகவரி
கள்ளிக்காடு சிவன்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்
இறைவன்
இறைவன் அகத்தீஸ்வரர்
அறிமுகம்
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், கள்ளிக்காடு சிவன்கோயில் மயிலாடுதுறை – நீடூர் தாண்டியதும் கொண்டால் எனும் இடத்தில் விக்கிரமசோழனாற்றினை தாண்டி இடது புறம் திரும்பி அதன் வடக்கு கரையில் இரண்டு கிமி பயணித்தால் கள்ளிக்காடு அடையலாம். கைலாயத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் சிவபெருமான் பார்வதி மேல் மோகம் கொள்ள வேண்டி, காமதேவன் சிவனை நோக்கி மலரம்புகளை எய்து விடுகிறார். இதனால் கோபம் கொண்ட சிவன், தனது முக்கண்ணைக்கொண்டு காம தேவனை எரித்து விடுகிறார். இது நடந்த இடம் குறுக்கை வீரட்டம் ஆகும். இது இவ்வூர் அருகில் உள்ளது. குறுக்கையைச் சுற்றியுள்ள ஊர்கள் பெயர்கள் இத்தலத்து வரலாற்றோடு தொடர்புற்றுள்ளன. சிவபெருமானின் தவத்தை கலைக்க முனைந்து மன்மதன் தன் கையில் கங்கணம் கட்டிக் கொண்ட ஊர் கங்கணப்புத்தூர். பாலருந்தியது பாலாக்குடி. வில்லெடுத்த ஊர் வில்லிய நல்லூர் குறி பார்த்த இடம் காவளமேடு. மன்மதனின் அம்பிலுள்ள ஐந்து மலர்கள்:-தாமரை, அசோகம், மாம் பூ, முல்லை, நீலோத்பலம் எனும் ஐந்து மலர்பாணங்களை எய்த இடம் எய்தநல்லூர் எனப்படும், ஐ பாண நல்லூர் தற்போது ஐவ நல்லூர் மன்மதன் எனும் கந்தர்வன் நின்ற இடம் கந்தர்வன்காடு எனப்பட்டு இப்போது கள்ளிக்காடு எனப்படுகிறது. ஊரின் மையத்தில் உள்ளது சிவன் கோயில் சிறிய கோயில் தான், அதுவும் சரியான பராமரிப்போ முறையான பூஜையோ இன்றி உள்ளது. சிவன்கோயிலுக்கு வழி கேட்டபோது அதான் புள்ளமாருங்க கும்புடுவாங்களே அந்த கோயில் என இருவருக்குள் விளக்கமளித்துக்கொண்டனர். இப்படித்தான் இருக்கு இந்து மத தெளிவு. கிழக்கு நோக்கிய கோயில் திருப்பணிகள் பாதியில் நிற்கின்றன. எதிரில் பெரிய குளம் ஒன்றும் உளது. இத்தல இறைவன் அகத்தியர் வழிபட்ட 108 தலங்களில் ஒன்றாகும். இறைவன் அகத்தீஸ்வரர் இறைவி பெயர் அறியக்கூடவில்லை இறைவன் கிழக்கு நோக்கியுள்ளார், இறைவன் எதிரில் முகப்பு மண்டபம் உள்ளது. அதில் நந்தியெம்பெருமான் இறைவனை நோக்கியவாறு உள்ளார்.கருவறை கோட்டங்களில் தெய்வங்கள் ஏதுமில்லை, பிரகாரத்தில் விநாயகர் மற்றும் சண்டேசர் சன்னதிகள் உள்ளன. விரைவில் பணிகள் முடிவுற்று கோயில் மக்கள் மனதில் நிற்க இறைவனை வேண்டுவோம். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி