களத்தூர் கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி
களத்தூர் கைலாசநாதர் சிவன் கோயில் களத்தூர், வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 613 703
இறைவன்
இறைவன் : கைலாசநாதர்
அறிமுகம்
கும்பகோணத்தின் தென் திசையில் உள்ள ஆவூர்- அம்மாபேட்டை சாலையில் வெட்டாற்றினை தாண்டினால் களத்தூர் கிராமத்தினை அடையலாம். சிறிய கிராமம் , ஊரின் உள்ளே நுழையும் இடத்தில உள்ள பெரிய குளத்தின் கரையில் கிழக்கு நோக்கி சிவாலயம் அமைந்துள்ளது. பழமையான சிவாலயம் சிதிலமடைந்துவிட்ட பின்னர் அதிலிருந்த லிங்க மூர்த்திகள், பிற தெய்வ சிலைகள் வெளியில் தனி கொட்டகை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன. பழமையான கோயிலின் சுற்றுசுவரில் வடபுறம் மட்டும் காணக்கிடைக்கிறது. இறைவன்- கைலாசநாதர் கட்டுமான ஒப்பந்ததாரர் வேலையினை ஏனோ அப்படியே போட்டுவிட்டு போய்விட்டார் என கிராம மக்கள் கூறுகின்றனர். 90% முடிவடைந்துவிட்ட நிலையில் இப்படி கைவிடப்பட்டது ஏனோ ?? பல வருடங்களாக கொட்டகையில் விநாயகரும் , இரு லிங்கமூர்த்திகளும், பைரவரும், நந்தி, பலிபீடமும் உள்ளனர். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
களத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி