கல்லிகுடி சந்திரார்த்தசூடேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
கல்லிகுடி சந்திரார்த்தசூடேஸ்வரர் சிவன்கோயில்,
கல்லிகுடி, திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 611101.
இறைவன்:
சந்திரார்த்தசூடேஸ்வரர்
இறைவி:
சௌந்தரநாயகி
அறிமுகம்:
திருவாருரின் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் ஒடம்போக்கி ஆற்றின் தென்கரையில் உள்ள அடியக்கமங்கலத்தில் இருந்து வடக்கில் 1½ கிமீ தூரத்தில் உள்ளது இந்த கல்லிகுடி. ஊரின் மத்தியில் ஒரு சிவன் கோயில் மற்றும் ஒரு விஷ்ணு கோயில் ஒன்றும் உள்ளது. சாலையின் ஓரத்திலேயே உள்ளது சிவன்கோயில், கிழக்கு நோக்கியது, கிழக்கு வாயில் வழி செல்லும்போது சிறிய விநாயகர் சிற்றாலயம் ஒன்று கட்டப்பட்டிருப்பதை பார்க்கலாம். இறைவன் சந்திரார்த்தசூடேஸ்வரர் இறைவி சௌந்தரநாயகி இறைவனின் பெயரை திருப்பி போட்டு பார்த்தால் பொருள் வரும். அர்த்த சந்திர சூடேஸ்வரர் – பிறை சந்திரனை சூடியவர் என பொருள் சந்திரன் பூசித்த தலமாக கருதப்படுகிறது.
இறைவன் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார் இறைவி தெற்கு நோக்கியுள்ளார், இரு கருவறைகளையும் ஒரு மண்டபம் இணைக்கிறது. நந்தி வெளியில் தனி மண்டபத்தில் உள்ளது. மண்டபத்தில் மேல் அழகிய சுதைகள் அணி செய்கின்றன. பிரகாரம் சுற்றி வரும்போது கோஷ்டத்தில் தென்முகன் மட்டும் உள்ளார் வடக்கில் தனித்து துர்க்கை உள்ளார். பிரகாரத்தில் விநாயகர் முருகனுக்கு தனி சிற்றாலயங்கள் உள்ளன. சுற்று மதில் சுவரில் கிழக்கிலும் மேற்கிலும் இரு வாயில்கள் உள்ளன. கோயில் பெரிதாய் பராமரிப்பு இல்லை, மரங்களின் இலை தழைகள் வில்வ காய்கள் வீழ்ந்து கிடக்கின்றன, ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது என நினைக்கிறேன். சந்திரதோஷம் உள்ளானவர்கள் இக்கோயில் இறைவனை வணங்கி விளக்கிட்டு வந்தால் தோஷம் நீங்க பெறலாம்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கல்லிகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி