Thursday Dec 19, 2024

கற்பகநாதர்குளம் கற்பகநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர் குளம்-614703. தொண்டியக்காடு வழி, திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4369 – 240 187 ,240632 ,99428 12437

இறைவன்

இறைவன்: கற்பகநாதர், கற்பகேசுவரர் இறைவி: சௌந்தர் நாயகி

அறிமுகம்

கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி தென்கரைத் தலங்களில் 109ஆவது சிவத்தலமாகும். இத்தலத்து விநாயகர் மாங்கனிப் பிள்ளையார், கற்பக விநாயகர். இராமபிரான், கார்த்திகாச்சுரன் எனும் அசுரன் ஆகியோர் வழிபட்ட தலம்.

புராண முக்கியத்துவம்

கார்த்திகாச்சுரன் என்ற அரக்கன் இத்தல இறைவனை வழிபாடு செய்து வரங்கள் பல பெற்றான். தான் வேண்டும் போதெல்லாம் கற்பக விருட்சம் போல வரங்களை அள்ளித்தந்த இறைவனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தான். இதனால் இத்தல இறைவன் கற்பகநாதர் என வழங்கப்படுகிறார். கற்பக விநாயகர் கற்பகநாதரை வழிபட்டு மாங்கனி பெற்றுள்ளார்.

நம்பிக்கைகள்

சகல வரங்கள் பெற இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு பரிகாரம் செய்ய ஏற்ற தலம்.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 173 வது தேவாரத்தலம் ஆகும். இத்தல சிவபெருமான் 8 முக பட்டை லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரை தரிசிப்பதால் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவரை அஷ்டமி திதியிலும், சனிக்கிழமை புத ஹோரையிலும் குங்குமப்பூவுடன் வெண்ணெய் சேர்த்து காப்பிட்டு வணங்கினால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் வெண்ணெய் தானம் செய்வது சிறந்தது. ராமர் சேது சமுத்திரத்தில் பாலம் கட்டும் முன்பாக இத்தலம் வந்து கற்பக விநாயகரையும், கற்பகநாதரையும் வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. இதன் காரணமாக கோதண்டராமர் கோயில் இத்தலத்தின் அருகே உள்ளது. ஒரு அந்தணர் தன் தந்தைக்கு பிதுர்கடன் செய்வதற்காக கொண்டு வந்த அஸ்தி இத்தலத்திற்கு வந்தவுடன் கொன்றை மலராக மாறியது என்பர்.

திருவிழாக்கள்

திருஇடும்பாவனம் தலத்தைப் போன்றே பித்ருக்களுக்கு பரிகாரம் செய்ய திருக்கடிக்குளமும் ஏற்ற தலம்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கற்பகநாதர்குளம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சிராப்பள்ளி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top