கருவாழக்கரை காமாட்சியம்மன் கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
கருவாழக்கரை காமாட்சியம்மன் கோயில்,
கருவாழக்கரை, தரங்கம்பாடி வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609304.
இறைவி:
காமாட்சியம்மன்
அறிமுகம்:
கருவாழக்கரை காமாட்சியம்மன் மயிலாடுதுறையில் இருந்து பூம்புகாருக்குச் செல்லும் வழியில், 9வது கிலோ மீட்டரில், காவிரியின் வடபகுதியில் கருவாழக்கரையில் காமாட்சி அம்மனின் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் எட்டுத் திசைகளிலும் நவக்கிரக சேத்திரங்களான சூரியனார் கோவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் ஆகியவை அமைந்திருக்கின்றன. எனவே இவர்களுக்கு நடுவே நவக்கிரக தேவியாக ஸ்ரீகாமாட்சி அம்மன் அமைந்து அருளாட்சி புரிந்து வருகிறாள். இங்கு ஆடி மாத வழிபாடு மிக சிறப்பாக நடத்தப்படுகிறது.
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் காமாட்சியம்மன் சன்னதியும், வீரன், பேச்சியம்மன், காத்தவாராயன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கருவாழக்கரை
அருகிலுள்ள இரயில் நிலையம்
தரங்கம்பாடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி