கருப்பூர் விஜயவிடங்கேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி
கருப்பூர் விஜயவிடங்கேஸ்வரர் திருக்கோயில், கருப்பூர், தஞ்சாவூர் மாவட்டம் – 613101.
இறைவன்
இறைவன்: விஜயவிடங்கேஸ்வரர் இறைவி: ஸ்ரீ சுகந்தகுஞ்சலாம்பாள்
அறிமுகம்
இத்திருக்கோயில் தஞ்சைக்கு மிக அருகில் கண்டியூர் அருகே அமைந்துள்ள கற்றளியாகும். திருக்கற்றளி தஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையின் ஓரத்தில் கண்டியூரில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவிலும் தஞ்சாவூரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. சோழநாட்டில் கற்றளிக்கு பஞ்சமில்லை. பலசெங்கற்தளிகளும் மண்தளிகளும் கற்றளிகளாக மாற்றப்பட்ட பெருமை இச்சோழ மன்னர்களையே சாரும். இத்தகு பெருமை வாய்ந்த சோழ நாட்டில் அமைந்ததுள்ளதுதான் இந்த கோவில். இறைவன் விஜயவிடங்கேஸ்வரர் என்றும் அம்மன் ஸ்ரீ சுகந்தகுஞ்சலாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். திறந்தவெளியில் சுற்றுசுவர் அதாவது மதில் சுவர் இன்றி கற்றளிகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. சிவாலயம் கிழக்கு பார்த்த நிலையிலும் அம்பாள் வடக்கு பார்த்த நிலையிலும் அமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பகிரகம் அர்த்த மண்டபம் இவையிரண்டும் அமைப்புடன் இணைந்து முழுமையும் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட திருக்கற்றளி ஆகும். கர்ப்பகிரகத்தில் விஜயவிடங்கேஸ்வரர் லிங்கமாகவும் ஆவுடையாராகவும் காட்சியளிக்கின்றார். கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம் ஆகியவற்றின் சுவர்களில் வரையப்பட்டுள்ள சிற்பங்களும் புடைப்புச் சிற்பங்களும் அதன் காலத்தால் மிகவும் பழமைவாய்ந்தது. இவற்றின் கட்டிடக்கலைப்பாணி பராந்தக சோழன் முதல் குலோத்துங்க சோழன் வரை பின்பற்றபட்டவையாகும். இக்கட்டிடக்கலைப்பாணி பிற்காலத்தில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சிறந்த மகர வாயில் சிறிய அளவில் வீரனின் சிற்பங்களும் வாளுடனும் கேடயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது தனி சிறப்பாகும். இதுபோன்ற அமைப்பு 9 முதல் 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். ஒவ்வொரு தேவ கூட்டத்தையும் அரைத்தூண்களுக்கு மேலே மகர தோரணம் அலங்கரிக்கின்றன.
புராண முக்கியத்துவம்
ஒரே வளாகத்தில் சிவாலயத்திற்கு அருகிலேயே தாயார் சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது. இவை சமகாலத்தியது தான என ஆராய முற்பட்டபோது கட்டமைப்பு பல மாற்றங்களையும் மேலும் விதானப்பகுதியில் செங்கற்களைப் பயன்படுத்தியுள்ளதும் வரும் காணமுடிந்தது. எனவே திருக்கற்றளி பின்னர் ஏற்பட்டதாக தோன்றுகின்றது. இதன் காலம் 11 – 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும் தோன்றுகின்றது பின்னர் புனரமைப்பின் போது செங்கற்களை கொண்டு விதான அமைப்பும் விமானமும் அமைக்கப்பட்டிருப்பது உறுதியாகிறது. ஒரு கோயிலின் காலத்தை கணக்கெடுப்பதற்கு கல்வெட்டுகள் தேவை அல்லது அக்கோயிலின் கட்டுமான அமைப்பை கொண்டும் அதன் காலத்தை கூறலாம். அந்த வகையில் இடிபாடுகளின் காணப்படும் இத்திருக்கோயிலில் சிதறிய கற்களைக் கொண்டு பிற இடங்களில் கோயில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தி உள்ளனர் என்ற கருத்தும் நிலவுகிறது. அதனடிப்படையில் இந்தப்பகுதியில் அமைந்துள்ள செந்தலைக்கோயில் காலத்தால் மிகவும் பழமையானது. எனவே அந்தகோயிலை புனரமைக்க இக்கற்களை பயன்படுத்தி இருந்திருக்கக்கூடும். அந்த வகையில் கோபுரத்தின் உட்புறத்தில் சில கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை இவ்வாலயத்தின் கற்கள் என்பது அதில் காணப்படும் கல்வெட்டு வாசகங்களை கொண்டு நாம் அறியமுடிகின்றது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கருப்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி