கம்மங்குடி கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி
கம்மங்குடி கைலாசநாதர் சிவன் கோயில், கம்மங்குடி, ஆதம்பூர் II, திருவாரூர் மாவட்டம் – 610 105.
இறைவன்
இறைவன் : கைலாசநாதர் இறைவி: அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்
பூந்தோட்டம் – நாச்சியார்கோவில் செல்லும் வழியில் வரும் மருதுவாஞ்சேரி கடைத்தெரு தெற்கில் பிரியும் சாலை உள்நுழைந்து 3 கி.மீ. சென்றால் கம்மங்குடி என்னும் சிற்றூர். இவ்வூரில் கிழக்குப் பார்த்த ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஆலயம். ஆலயத்தின் வலதுபுறத்தில் ஒரு பெரியகுளம், கிழக்கு கரையில் காளியம்மன் ஆலயமும் உள்ளது. ஊரில் ஒரு மிகச் சிறிய பெருமாள் ஆலயமும் உள்ளது சிவன் ஆலயம், குளத்தின் வடகரையில் இருந்தாலும், ஆலயம் முழுதும் மதில் சுவர் இருப்பதால், ஆலயத்தின் மேற்குப் புறத்தில் உள்ள சிறிய வழியாகத்தான் செல்ல முடியும். அருகில் விசாரித்தால், ஆலயத்தின் சாவி பெற்று தரிசிக்கலாம். கிழக்குப் பார்த்த ஆலயம். சுவாமி ஸ்ரீ கைலாசநாதர் கிழக்குப் பார்த்தும், தெற்கு நோக்கியபடி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியும் அமைந்துள்ளனர். ஏக மண்டபம். முன்புறம் சிறிய நந்தியும் தனி மண்டபத்தில் உள்ளார். சுற்று பிரகாரத்தில், தட்சினாமூர்த்தி, தனிவிநாயகர், முருகர், மகாலட்சுமி தனிதனி சன்னதிகள். உள் நுழைவு பாதை மிகக் சிறியதாக உள்ளன. துர்க்கை சுதையிலும், சண்டிகேஸ்வரும் உள்ளனர். சுற்றிலும் மதில் சுவர், வேலியும் போட்டு காத்து வருகின்றனர். சுவாமி அடிபகுதி மட்டும் கருங்கற்கள் மேல்பகுதி முழுதும் செங்கல் காங்கிரீட் சுவர். சுவர் பகுதிகள் மிகவும் பழுதடைந்து தெரித்து சிதலமடைந்து உள்ளது. அவசியம் ஊர்மக்கள் ஒன்றுகூடி புனரமைத்து வழிபட வேண்டிய சூழலில் உள்ளது. ஒரு காலம் மட்டும் நடைபெற்று வருகிறது. கிராமம் முழுதும் வயல்வெளி சூழலில் உள்ள எளிமையான சிற்றூர். ஊர்மக்கள் மேலும் பலர் சேர்ந்து தொடர்ந்து ஒன்று பட்டு வணங்கி வழிபட ஆலயம் மிகவும் சிறப்படையும். ஆலய வழிபாடே இவ்வுரை சிறப்புறச் செய்யும். சாலை வசதிகள் மேம்பட வேண்டும்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கம்மங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி