கடலங்குடி கச்சபரமேஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
கடலங்குடி கச்சபரமேஸ்வரர் சிவன்கோயில்,
கடலங்குடி, குத்தாலம் வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609806.
இறைவன்:
கச்சபரமேஸ்வரர்
இறைவி:
காமேஸ்வரி
அறிமுகம்:
மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் கடலங்குடி எனும் பெயர் கொண்ட பல கிராமங்கள் உள்ளன, அவற்றில் இந்த கடலங்குடி மயிலாடுதுறை – கல்லணை சாலையில் வானதிராஜபுரம் அடுத்துள்ளது. இவ்வூர் கடலங்குடி என்றும் ரெட்டி கடலங்குடி எனவும் அழைக்கப்படுகிறது. பிரதான சாலையில் இருந்து வடக்கில் செல்லும் சாலையில் ஒரு கிமீ தூரம் சென்றால் கடலங்குடி, ஊரின் வடக்கில் தனித்து உள்ளது சிவாலயம். இறைவன் கச்சபரமேஸ்வரர் இறைவி காமேஸ்வரி.
பல காலம் சிதைந்து இருந்த இக்கோயில் இறைவனுக்கு அம்பிகை உட்பட அனைத்து மூர்த்தங்களும் செய்து வைக்கப்பட்டு முற்றிலும் புதிய கோயில் எழும்பி உள்ளது. கிழக்கு நோக்கிய கோயில் ½ ஏக்கர் பரப்பில் மதில் சுவற்றுடன் உள்ளது. எனினும் வழி மேற்கில் மட்டுகே உள்ளது இறைவன் கிழக்கு நோக்கியுள்ளார் அவரின் முன்னம் நீண்ட மண்டபம் உள்ளது. எதிரில் நந்தி பலிபீடமும் உள்ளது. இறைவன் கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் உள்ளனர். இறைவி தெற்கு நோக்கியுள்ளார் கருவறை கோட்டத்தில் விநாயகர், தென்முகன், லிங்கோற்பவர் மற்றும் பிரம்மன் துர்க்கையும் உள்ளனர் துர்க்கை தனி சன்னதியாக கட்டப்பட்டுள்ளது பிரகாரத்தில் வேறு மூர்த்தங்களும் இல்லை. வாழை மற்றும் வில்வம் போன்ற செடிகள் வளர்க்கப்படுகின்றன. காலை ஒருவேளை பூஜை மட்டும் நடைபெறுகிறது.
புராண முக்கியத்துவம் :
சமுத்திர மந்தனம் என்பது தேவர்களாலும், அசுரர்களாலும் பாற்கடல் கடையப்பட்ட நிகழ்வாகும். அசுரரும் தேவரும் மேரு மலையை மத்தாக வைத்து, வாசுகி பாம்பைக் கயிறாகக் கொண்டு, திருப்பாற்கடலைக் கடைகையில், விஷ்ணு, ஆமை உரு எடுத்து மேரு மலைக்கு பிடிமானமாக இருந்தார். கூர்ம (கச்சம்)அவதாரத்தைப் பற்றிய மிகவும் பழமையான குறிப்பு (யசுர் வேதத்தில்) சதபத பிராமணம் எனும் நூலில் காணப்படுகிறது. விஷ்ணு கச்ச உருவில் வழிபட்ட ஈசன் என்பதால் இங்கே இறைவன் கச்சபரமேஸ்வரர் என பெயர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கடலங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
குத்தாலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி