ஓதா மகாதேவர் கோயில், மகாராஷ்டிரா
முகவரி :
ஓதா மகாதேவர் கோயில், மகாராஷ்டிரா
ஓதா கிராமம், நாசிக்,
மகாராஷ்டிரா 422201
இறைவன்:
மகாதேவர் (சிவன்)
அறிமுகம்:
மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள ஓதா கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான மகாதேவர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாசிக்கின் வரலாற்றுக்கு காலாராம் கோவில் வடிவில் விலைமதிப்பற்ற பரிசை வழங்கிய சிற்பிகளின் கிராமம் என்று ஓதா கிராமம் அறியப்படுகிறது. நாசிக் மாவட்டத்தில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலாக நம்பப்படும் இந்த கோயில் முற்றிலும் சிதிலமடைந்ததுள்ளது. கோயிலில் சிலை இல்லை, உடைந்த லிங்கம் மட்டுமே கோயில் வளாகத்தில் உள்ளது. இந்த ஊரில் பல பழமையான மற்றும் அழகான கோவில்கள் உள்ளன. துரதிர்ஷ்டவசமாக, இந்த மகாதேவர் கோவில் தற்போது கைவிடப்பட்ட இடிந்த நிலையில் உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஓதா
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாசிக்
அருகிலுள்ள விமான நிலையம்
நாசிக்