ஒத்தக்கடை நாகம்மாள் கோயில், திண்டுக்கல்
முகவரி :
ஒத்தக்கடை நாகம்மாள் கோயில்,
ஒத்தக்கடை,
திண்டுக்கல் மாவட்டம் – 624308.
இறைவி:
நாகம்மாள்
அறிமுகம்:
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒத்தக்கடை என்னும் ஊரில் நாக வழிபாட்டிற்கு என நாகம்மாள் கோயில் அமைந்துள்ளது. திண்டுக்கல்லில் இருந்து தடம் எண் 2 மூலம் பயணித்து ஒத்தக்கடையை அடையலாம். இது எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
1935ஆம் ஆண்டு இப்பகுதியில் விவசாயம் செய்து கொண்டிருந்த சிலரது கனவில் ஒருநாள் பெரிய நாகம் ஒன்று தோன்றியதால் அது தனக்கு பசுமையான இடத்தில் இருப்பிடம் வேண்டும் எனக் கேட்டதாகவும் அதன்படி இங்கு கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆலமரம் அரசமரம் வேப்பமரம் புங்கமரம் சூழ்ந்த இயற்கையான சூழலில் கோயில் அமைந்துள்ளது. முன்புறம் திரிசூலம் இருக்க கோயில் முகப்பில் சுதையாலான ஐந்து தலை நாகம் ஒன்று படம் எடுத்த நிலையில் காணப்படுகிறது.
கருவறையில் அரவத்தின் உருவில் நாகம்மாள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளாள். தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. சர்ப்பத்தின் வடிவில் அருளும் இந்த அன்னையை வணங்கினால் சர்ப்ப தோஷங்கள் எல்லாம் நீங்கும் என்பது நம்பிக்கை. கோயில் அருகே 5 அடி உயர புற்று உள்ளது. அதில் நாகம் இருப்பதாக சொல்கிறார்கள். பலர் பால் ஊற்றி முட்டை வைத்து வணங்குகிறார்கள்.
நம்பிக்கைகள்:
குழந்தை வரம் வேண்டும் பெண்கள் நாகம்மாளை மனதார நினைத்து ஒரு வாரம் விரதம் இருந்து பின்னர் சிறு தொட்டிலை வாங்கி அதை வேப்ப மரத்தில் கட்டிவிட்டு வேண்டினால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என நம்புகிறார்கள். திருமணமாகாத ஆண் பெண் பக்தர்கள் மஞ்சள் கயிறு வாங்கி பிரார்த்தனை செய்து மரத்தில் கட்டி வைத்தல் விரைவில் மணமாலை தேடி வரும் என்பது நம்பிக்கை.
நாகம்மாளை நினைத்து வேண்டிக்கொண்டு பலியிடுகிறார்கள். நாகம்மாள் கோயிலை நோக்கி நூற்றுயொரு முறை சுற்றிவந்து வேண்டிய காரியங்கள் அனைத்தும் நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை இங்கு நிலவுகிறது.
காலம்
300 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஒத்தக்கடை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திண்டுக்கல்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை