எடமேலையூர் சித்தர் பீடம், திருவாரூர்
முகவரி :
எடமேலையூர் சித்தர் பீடம்,
எடமேலையூர், மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614013.
இறைவன்:
மகாலிங்கசுவாமி
அறிமுகம்:
மன்னார்குடியில் இருந்து அதன் வடக்கில் 8 கிமீ தூரத்தில் உள்ளது எடமேலையூர். இடங்கன்கோட்டை-மேலையூர் என்பதே எடமேலையூர் ஆனது. இங்கிருந்து வடுவூர் வடபாதி செல்லும் பாதையில் உள்ளது இந்த அருள்ஒளி மகாலிங்கேஸ்வரர் சித்தர்பீடம். அருளொளி பரஞ்சோதி சக்கரபாணி சித்தர் ஜீவசமாதியான இடத்தில் ஒரு மேடை அமைத்து உள்ளனர். இதன் எதிரில் மகாலிங்கசுவாமி எனும் லிங்கமூர்த்தி அமைத்து உள்ளனர். இறைவன் எதிரில் நந்தி உள்ளது அதன் பின்னால் ஒரு மண்டபத்தில் இந்த சித்தர் இறைவனை நோக்கியபடி அமர்ந்துள்ளார். இக்கோயில் கிழக்கு நோக்கி உள்ளது தெற்கு நோக்கி அம்பிகைக்கும் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.
இறைவனின் கருவறை விமானம் வடநாட்டு பாணியில் உள்ளது, அதன் ஓரங்களில் நாகர்கள் பின்னியபடி அமைத்துள்ளனர். இறைவியின் கருவறை விமானம் இயல்பாக தென்னிந்திய பாணியில் உள்ளது. இறைவனின் தென்புறம் ஒரு தனியறையாக தக்ஷ்ணமூர்த்தி வைக்கப்பட்டு உள்ளார். பிரகாரத்தில் ஆளுயரத்தில் ஒரு பைரவர் தெற்கு நோக்கி உள்ளார். சண்டேசர் சன்னதி உள்ளது. கிழக்கு நோக்கி பெரிய அளவிலான சரஸ்வதி, மகாலட்சுமி உள்ளனர். . ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாசசித்தர், என்பவர் நிர்வகித்து வருகிறார்.
காலம்
500-1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
எடமேலையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி