உத்திரங்குடி சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி
உத்திரங்குடி சிவன்கோயில், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609308
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
பிறந்த மண்ணுக்காக, தன் அரசனுடைய வெற்றிக்காக போர்க்களம் புகுந்து பகைவருடன் ஆற்றலோடு போர் புரிந்து உதிரத்தை சிந்தி வீரம் காட்டிய போர் வீரர்களுக்கு, வெற்றி பெற்ற அரசன் நிலங்களை தானமாக அளிப்பது வழக்கம். அவ்வாறு வழங்கப்பட்ட சிறப்புடைய மண்ணை நாம் இப்போது வணங்க செல்கின்றோம். செம்பனார்கோயிலின் தெற்கில் 8கி.மீ. தொலைவில் திருவிளையாட்டம் எனும் ஊர் உள்ளது, அங்கிருந்து கிழக்கில் செல்லும் பொறையார் சாலையில் 2கி.மீ. தூரத்தில் உள்ள சங்கரன்பந்தல் எனும் இடத்தில் ஓடும் வீரசோழன் ஆற்றினை தாண்டி ½ கி.மீ. வடக்கில் சிறிய கிராமமாக உள்ளது உதிரங்குடி, மக்கள் உத்திரங்குடி என்கின்றனர். இங்கு பெரிய குளத்தின் கரையில் இறைவனுக்காக கோயில் எழுப்பப்பட்டு வருகிறது, உயர்ந்த விமானம் கொண்டு எழும்பி வருகிறது திருக்கோயில். பழங்கோயில் என்னவானது என அறியமுடியவில்லை. இறைவன் தற்போது சிறிய கொட்டகை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளார். சிறிய ஊர் என்பதால் திருப்பணிகள் நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
உத்திரங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி