இலுப்பூர் சிதம்பரேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
இலுப்பூர் சிதம்பரேஸ்வரர் சிவன்கோயில்,
கீழ்வேளூர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611105.
இறைவன்:
சிதம்பரேஸ்வரர்
இறைவி:
சிவகாமி
அறிமுகம்:
திருவாருரின் கிழக்கில் உள்ள கீவளூரில் இருந்து தேவூர் செல்லும் பிரதான சாலையில் இலுப்பூர் சத்திரம் என ஒரு நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து மேற்கில் ஒரு கிமீ தூரத்தில் உள்ளது இலுப்பூர். சிறிய கிராமம்தான், ஊரின் மத்தியில் பெரிய குளம் ஒன்றின் கரையில் உள்ளது சிவன் கோயில். கிழக்கு நோக்கியது எனினும் தெற்கு நோக்கிய பிரதான வாயில் உள்ளது. அதன் வழி உள்ளே சென்றதும் அதன் நேர் எதிரில் அம்பிகையின் கருவறை இறைவன் கிழக்கு நோக்கி உள்ளார். இறைவன் சிதம்பரேஸ்வரர் இறைவி சிவகாமி இரு சன்னதிகளையும் இணைக்கும் மண்டபத்தில் ஒரு புறத்தில் இரு பைரவர் மற்றும் பெண் தெய்வ சிலை ஒன்றும் உள்ளன.
பிரகார வலம் வரும்போது தென்மேற்கில் விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகள் அருகருகே உள்ளன. இந்த முகப்பு மண்டபத்தின் வெளியில் தனி மண்டபத்தில் நந்தி உள்ளார். அவரின் பின்புறம் ஒரு பலிபீடம் உள்ளது. வடமேற்கில் மகாலட்சுமி சிற்றாலயம் உள்ளது. இறைவனது முகப்பு மண்டத்தில் கிழக்கு பகுதியில் கிழக்கு நோக்கிய சனைச்சரன் சன்னதி மற்றும் அருகில் ஒரு விநாயகர் ஒரு ஆஞ்சநேயரும் உள்ளது கோயில் திருப்பணிக்காக காத்திருக்கிறது. அம்பிகை கருவறை ஒட்டியவாறு தெற்கு நோக்கிய நடராஜர் சன்னதி அவரது கருவறை காலியாக திறந்து கிடக்கிறது. நடராஜர் தான் இல்லை. தன்னிருக்கை விடுத்து பாதுகாப்பறை எனும் ஓர் மூச்சு திணறும் ஒரு இருட்டறையில் தனிமையில் இருப்பார் என்பதை நினைக்கும்போது மனம் கனக்கிறது. நம்ம பூட்டன், தாத்தன், அப்பன் காலம் வரை பாதுகாத்த திருமேனியை காக்க தவறிய பாவிகளாகிப்போனோம்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இலுப்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி