Friday Dec 27, 2024

இறையூர் – எறையூர் தாகம்தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி

இறையூர் – எறையூர் தாகம்தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், இறையூர் – எறையூர், (பெண்ணாடம் இரயில் நிலையம்), திட்டக்குடி வட்டம், விழுப்புரம் மாவட்டம் – 606111.

இறைவன்

இறைவன்: தாகம் தீர்த்த புரீஸ்வரர் இறைவி: அன்னப்பூரணி

அறிமுகம்

தமிழ் நாடு விருத்தாசலம் – பெண்ணாகடம் – திட்டக்குடி பேருந்துச் சாலையில், பெண்ணாகடத்தை அடுத்துள்ளது. (பெண்ணாகடம் – திருநெல்வாயில் அரத்துறை இவற்றிற்கு இடையில் உள்ளது.) அருணா சர்க்கரை ஆலை மேனிலைப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இக்கோவிலுக்கு செல்லலாம். மாறன்பாடி மக்கள் வழக்கில் இறையூர் – எறையூர் என்று வழங்குகிறது. இத்தலம் சம்பந்தர் வாக்கில் இடம்பெற்றுள்ள நடுநாட்டு வைப்புத் தலமாகும். திருஞானசம்பந்தருக்கு, அரத்துறை நாதர் முத்துச் சிவிகை தந்த தலம். திருஞானசம்பந்தரும் அரத்துறைநாதரும் தனித்தனி விமானங்களில் எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலில் தாகம் தீர்த்தபுரிஸ்வரர்சுவாமி, அன்னபூரணி சன்னதிகளும், அருள்மிக விநாயகர் முருகன் நவகிரகம் சனிஸ்வரர் கஜலட்சுமி, நாள்வர் சந்தானகுறவர் சமயகுரவர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

புராண முக்கியத்துவம்

திருமுதுகுன்றம், பெண்ணாகடம் தொழுத திருஞானசம்பந்தர் நெல்வாயில் அரத்துறையைத் தரிசிக்கச் செல்லும் வழியில், மாலை பொழுது ஆனமையின் மாறன்பாடியை அடைந்து அவ்விரவு தங்கினார். அவருடைய நடைக்களைப்பையுணர்ந்த இறைவன் அன்றிரவு அவ்வூரில் உள்ளவர்களின் கனவில் தோன்றி, “நம்மைத் தொழ வருகின்ற ஞானசம்பந்தனுக்குத் தருவதற்காக முத்துச்சிவிகை, குடை, சின்னம் முதலியவற்றை அளித்துள்ளோம். அவற்றை எடுத்துச் சென்று அவரை எம்மிடம் அழைத்து வருக” என்றருளினார். விழித்த அவர்கள் காலையில் சென்று, கோயிலில் அவைகள் இருக்கக் கண்டு அதிசயித்து, அவ்வாறே அவற்றை எடுத்துச் சென்று ஞானசம்பந்தரை வரவேற்றனர். திருவருட் கருணையை வியந்த திருஞானசம்பந்தர், ஐந்தெழுத்து ஓதி அச்சிவிகையில் ஏறி அரத்துறை சென்றார் என்பது வரலாறு.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

எறையூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பெண்ணாடம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top