Friday Dec 27, 2024

இருஞ்சியூர் வேதபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டிணம்

முகவரி

இருஞ்சியூர் வேதபுரீஸ்வரர் திருக்கோயில், இருஞ்சியூர், தேவூர் அஞ்சல், கீழ்வேளூர் தாலுகா, நாகப்பட்டிணம் மாவட்டம் – 611109

இறைவன்

இறைவன்: வேதபுரீஸ்வரர் இறைவி: வேதநாயகி

அறிமுகம்

வேதபுரீஸ்வரர் கோயில் என்பது இருஞ்சியூரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் தாலுகாவில் அமைந்துள்ளது. மூலவர் வேதபுரீஸ்வரர் மற்றும் தாயார் வேதநாயகி என்றும் அழைக்கப்படுகிறார். இந்த கோவில் அவதாரமாக கருதப்படுகிறது மற்றும் 63 நாயன்மார்களில் ஒருவரான சத்தி நாயனாரின் முக்தி ஸ்தலமாக கருதப்படுகிறது. தேவார வைப்புத் தலத்தில் தேவாரப் பாடல்களில் இக்கோயிலைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பழங்காலத்தில் வரிஞ்சை என்று அழைக்கப்பட்டது.

புராண முக்கியத்துவம்

காவிரி பாயும் சோழ வளநாட்டில் வரிஞ்சையூர் என்ற தலத்தில் வேளாளர் குலத்தில் சத்தி நாயனார் என்னும் நாமமுடைய சிவத்தொண்டர் வாழ்ந்து வந்தார். நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரிலிருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது வரிஞ்சையூர் என்னும் அழகிய கிராமம். தற்போது அதனை இரிஞ்சியூர் என்று அழைக்கிறார்கள். சோழ வள நாட்டிலே அமைந்துள்ள வரிஞ்சையூர் சிவனடியார்களை நிந்தித்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற உணர்வுடன் தொண்டாற்றியவர் சத்தி நாயனார். அறுபத்து மூவருள் ஒருவரான இவரை , சுந்தரமூர்த்தி சுவாமிகள், ” சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் ” என்று பாடுகிறார். சத்தி நாயனார் சிவனடியார்களைப் பழித்து யாரேனும் இகழ்ந்து பேசினால் அக்கணமே அவர்களது நாவினை குறட்டினால் பிடித்து அரிவார். சத்தி என்ற ஆயுதத்தை இதற்காக அவர் ஏந்தி வந்தார். இத்தகைய வலிய மனமும் சக்தியும் வாய்க்கப் பெற்று ஒழுகி வந்தமையால் தான் இவர் சத்தி நாயனார் என்று திருநாமம் பெற்றார். சிவனடியார்களை எவரும் இகழாவண்ணம் காத்து வரும் பணியில் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்தார். சிவபெருமானுக்கு அளவிலா தொண்டாற்றி வந்த இத்திருத்தொண்டர், சிவபெருமானுடைய அழகிய சேவடி நீழலை அடைந்தார்.

நம்பிக்கைகள்

சத்தி நாயனார் சிவனடியார்களைப் பழித்து யாரேனும் இகழ்ந்து பேசினால் அக்கணமே அவர்களது நாவினை குறட்டினால் பிடித்து அரிவார். இதனால் ஆயுள் விருத்திக்காகவும், ஆயுள் தோஷம், நோயினில் பீடிக்கப் பட்டோர் குணமாக வேண்டுதலை வேண்டிக் கொண்டு இங்கு வந்து தொழுகிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

வரிஞ்சையூரில் உள்ள சிவாலயத்தில் சத்தி நாயனாருக்காக தனிச் சன்னதி அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் கூப்பிய கரங்களுடன், சுவாமி சன்னதியை நோக்கியவாறு நாயனார் காட்சி அளிக்கிறார். அம்பிகை சன்னதி தெற்கு நோக்கியது. சுவாமி சன்னதியின் அர்த்த மண்டபத்தில் பெரிய புராணத்தில் வரும் சத்தி நாயனார் புராணத்தைக் கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறார்கள்.

திருவிழாக்கள்

ஐப்பசி மாதப் பூச நக்ஷத்திரத்தன்று நாயனாரது குருபூஜை நடைபெறுகிறது.

காலம்

8 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தேவூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கீழ்வேளூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top