இரண்டாம் கட்டளை கைலாசநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
இரண்டாம் கட்டளை கைலாசநாதர் சிவன்கோயில்,
அன்னை காமாட்சி.
கும்பகோணம் தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம் – 612202.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
அன்னை காமாட்சி
அறிமுகம்:
பழமையான வரலாறும் கல்வெட்டுகளும் நிறைந்த இயற்கை சூழ்ந்த இயற்கையான சூழலில் அமைந்த இக்கோயிலில் நீண்டகாலமாக பூஜைகள் நடைபெறாமல் இருந்துள்ளது. தற்போது பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றர். .கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இரண்டாம் கட்டளை.
புராண முக்கியத்துவம் :
பாரதத்தின் பல்வேறு பாகங்களுக்கு பாதயாத்திரையாக சென்று சிவ வழிபாட்டை மேற்கொண்டிருந்த சித்தர் ஒருவர், துர்க்கையம்மன் ஆட்சிபுரியும் துக்காச்சி தளம் பற்றி கேள்விப்பட்டு அங்கு செல்லலாம் என்று முடிவு செய்து பயணத்தை தொடர்ந்தார். இரண்டாம் கட்டளை என்ற இடத்தில் திடீரென்று ஒருபுறம் கீர்த்திமான் ஆற்று வெள்ளமும் இன்னொருபுறம் அரசலாற்று வெள்ளமும் கடல் போல் அவரை சூழ்ந்துகொண்டது. கோவிலுக்கு செல்லும் வழியில் இது என்ன சோதனை, இவ்வாறு வெள்ளம் சூழ்ந்த கொண்டால் நான் உன்னை காண்பது எப்படி என்று சிவனிடம் வேண்டி கொண்டிருந்தார்.
திருவிளையாடல்களை புரியும் ஈசன் காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் அவருக்கு காட்சியளித்தார். துக்காச்சிக்கு செல்ல உனக்கு வழி வேண்டும் என்றால் இங்கு சிவாலயம் ஒன்று அமைக்க வேண்டும். மேலும் மகா கணபதி போற்றி குளம் ஒன்றை வெட்டி 108 அந்தணர்களைக் கொண்டு வேதபாடசாலை நடத்த வேண்டும் என்றார். வெள்ளக்காடாக உள்ள இந்த இடத்தில் 108 அந்தணர்களைக் கொண்டு வேதபாட சாலை அமைப்பது எப்படி உருவாக்குவது எப்படி என்று தவித்த அந்த சித்தர் மறுபடியும் மகேசனிடம் வேண்டினார். அதற்கு ஈசன் இவ்வூரில் என்னிடம் எஜமான் பட்டம் வென்ற பக்தர் ஒருவர் இருக்கிறார் அவரிடம் சென்று சொல் அவர் நிறைவேற்றி வைப்பார் என்று சொல்லி மறைந்தார்.
சிவபெருமான் சொன்ன பக்தரை தேடிச் சென்று நடந்ததை விபரமாகக் கூறினார். சித்தர் தனக்கும் அப்படி ஒரு அசிரீரி கேட்டதாக சொன்னான். அவன் நாம் உங்களுக்கு உதவுகிறேன் என்று கூறினார், அவன் சொன்னது போல் உருவானதுதான் இரண்டாம் கட்டளை ஆலயம். மேலும் சிவ பக்தராக வந்த சித்தர் வேறு யாருமல்ல திருமூலர். திருமூலர் இப்பகுதியில் உள்ள பல சிவத்தலங்களில் இருப்பதற்கான ஆதாரங்களும் கல்வெட்டு செய்திகளும் பல கோயில்களில் காணப்படுகின்றன. இக்கோயிலில் 1954ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது காஞ்சி மகா பெரியவர் வருகை தந்து ஆசீர்வதித்தாதக ஊர் பெரியவர்கள் கூறுகிறார்கள்.
நம்பிக்கைகள்:
குழந்தை இல்லாத தம்பதியர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் அன்பர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கினால் பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்:
கிழக்கு பார்த்த கோயில். கிழக்கே தீர்த்தம் அமைந்திருப்பதால் முதன்மை நுழைவாயில் தெற்கு பக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு வாயிலின் வழியே சென்றால் நந்தியம் பெருமான் சிவனை நோக்கி தவம் செய்து கொண்டிருக்கிறார். அவரை வணங்கிவிட்டு உள்ளே சென்றால் இடதுபுறம் பிள்ளையார் வலதுபுறம் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் சுவாமி அருள் வழங்குகிறார். கருவறை மண்டபத்தில் கைலாசநாதர் எழுந்தருளியுள்ளார். திருசுற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் அருள்புரிகிறார்கள். இங்கு சண்டிகேஸ்வரரை காணலாம். அதை தொடர்ந்து துர்க்கை அம்மன் சன்னதி பைரவர் நவக்கிரக சன்னதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன இடதுபுறம் தெற்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறாள் அன்னை காமாட்சி.
திருவிழாக்கள்:
ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடபடுகிறது. ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தவிர மாதந்தோறும் பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. வைகாசி விசாகத் திருநாள் அன்று முருகப் பெருமானுக்கு பால் காவடி எடுத்து அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன என்று முருகப் பெருமானுக்கு நடைபெறும் சிறப்பு அலங்காரத்தை காண்பதற்கு ஏழு கட்டளைகளில் இருந்து பக்தர்கள் வருகிறார்கள்.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இரண்டாம் கட்டளை
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி