ஆலத்தம்பாடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
ஆலத்தம்பாடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில்,
ஆலத்தம்பாடி, திருத்துறைபூண்டி வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
இறைவன்:
அகத்தீஸ்வரர்
இறைவி:
ஆனந்தவள்ளி
அறிமுகம்:
திருவாரூர் – திருத்துறைபூண்டி சாலையில் இருபது கிமீ தூரம் வந்தவுடன் அரிச்சந்திரா நதியை தாண்டி வலதுபுறம் திரும்பி அதன் தென் கரையில் மேற்கு நோக்கி 2 கிமீ தூரம் கரையிலேயே சென்றால் பொன்னிறை எனும் இடத்தில் ஆற்றை கடந்தால் ஆலத்தம்பாடி உள்ளது. ஆல்-அத்தம்-பாடி என பிரித்து பொருள் கொண்டால் ஆலமர காட்டில் இருக்கும் குடியிருப்பு என பொருள் தரும். செழிப்பான பெரும் நெல் வயல்களிடையே உள்ளது கிராமம் இங்கு வடகிழக்கு பகுதியில் பெரிய குளத்தின் கரையில் உள்ளது இந்த சிறிய சிவன் கோயில். கிழக்கு நோக்கிய திருக்கோயிலாக அமைந்துள்ளது. இறைவன் – அகத்தீஸ்வரர் இறைவி – ஆனந்தவள்ளி
அகத்தியர் தென்னகம் நோக்கி பயணித்தபோது உருவாக்கி வழிபட்ட திருக்கோயில்கள் 163 எனப்படுகின்றன அதில் இக்கோயிலும் ஒன்று எனப்படுகிறது. இறைவன் கிழக்கு நோக்கியவர் நடுத்தர அளவுடைய லிங்கமூர்த்தியாக உள்ளார். இறைவி தெற்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளார், முகப்பில் ஓட்டு கூரை போடப்பட்டுள்ளது. நந்தி தனியாக வெளியில் உள்ளார். கருவறை வாயிலில் ஒரு சிறிய விநாயகர் ஒருபுறமும் மறுபுறம் தண்டாயுதபாணி முருகனும் உள்ளார். கருவறை சுற்றில் கோஷ்டங்கள் என ஏதும் இல்லை. பிரகாரத்தில் ஒரு பெரிய வில்வமரம் உள்ளது. வடகிழக்கில் நவகிரகங்கள் உள்ளன. எளிமையான திருக்கோயில், எனினும் அகத்தியர் வழிபட்ட பெருமைக்கு ஈடேது!!
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆலத்தம்பாடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி