ஆலங்குடி சிவன் கோயில், மயிலாடுதுறை
முகவரி
ஆலங்குடி சிவன் கோயில் ஆலங்குடி, குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609801 கைபேசி எண் -6382791751
இறைவன்
இறைவன்: சிவன் இறைவி: பார்வதி
அறிமுகம்
ஆலங்குடி என்றவுடன் நம் நினைவில் வருவது தக்ஷணமூர்த்தி சிறப்பு கோயில் தான். ஆனால் ஐந்துக்கும் மேற்பட்ட ஆலங்குடிகள் உள்ளன. அதில் குத்தாலம்- பந்தநல்லூர் சாலையில் உள்ள ஆலங்குடி தான் இது. இங்கு ஊரின் நடுவில் பிரதான சாலையோரத்தில் பல வருடங்களாக ஒரு தென்னையோலை குடிசையில் வசித்துவந்த இறைவன் தற்போது சில கைங்கர்யதாரர்கள் உதவியால் உயர்ந்த கோயிலுக்கு இடம் பெயர்ந்துள்ளார். இறைவன் பெயரை உள்ளூர் மக்கள் யாரும் அறிந்து வைத்திருக்காததால் இறைவனுக்கு இங்கு பெயரில்லை, இறைவியின் கருவறை மட்டும் இடிந்த நிலையில் தென்புறம் நோக்கியுள்ளது. பழம் குடிசையில் ஒரு விநாயகரும் நவகிரகங்களில் சிலவும் உள்ளன. எனினும் இன்னும் திருப்பணிகள் நிறைவடையவில்லை. அம்மன் சன்னதி கோஷ்ட மூர்த்திகள், பரிவார தேவதைகள் என பணிகள் மீதமுள்ளவை பட்டியல் நீளம். இயன்றோர் பொருள் கொடுத்து சிவாலயம் விரைவில் குடமுழுக்கு காணலாம். ஆலங்குடி ஊராட்சி தலைவர் மற்றும் திருக்கோயில் கட்டுமான பணி ஒருங்கிணைப்பாளர் திரு.வைத்தி அவர்களது கைபேசி எண் -6382791751
புராண முக்கியத்துவம்
ஆலமரங்கள் நிறைந்த பகுதி ஆலங்குடி எனப்பட்டது என்பார்கள், ஆனால் இந்த தனி ஊரை மட்டும் பார்க்காமல் சுற்றியுள்ள ஊர்களையும் சேர்த்தே கவனித்தால் தான் ஊர் பெயர் ஏன் வந்தது என அறுதியிடமுடியும். இவ்வூரை சுற்றியுள்ள பத்து கி.மீ. சுற்றிவர பெரும்பாலான ஊர்கள் சூரியனை சுட்டும் பெயர்களை கொண்டே அமைந்துள்ளன. அதனால் இந்த ஊருக்கு ஆலங்குடி என்பதற்கு பதில் ஆதவன்குடி என பெயர் இருந்திருக்கலாம். பின்னர் ஆலங்குடி என மருவி இருக்கலாம். சிறிய சாலையோர கிராமம் தான், குத்தாலத்தில் இருந்து ஆறு கி.மீ.க்கும் குறைவான தூரத்தில் அடையலாம். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆலங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
குத்தாலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி