Sunday Nov 24, 2024

ஆபரணதாரி அருணாசலேஸ்வரர் கோயில், நாகப்பட்டினம்

முகவரி :

ஆபரணதாரி அருணாசலேஸ்வரர் கோயில்,

ஆபரணதாரி, நாகை வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம் –  611104.

இறைவன்:

அருணாசலேஸ்வரர்

இறைவி:

உண்ணாமுலையம்மை

அறிமுகம்:

ஆவராணி எனும் இத்தலம் நாகப்பட்டினம் – திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்கலிலிருந்து தென்மேற்கில் 3கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சிக்கலின் தென்புறம் செல்லும் தொடர்வண்டி பாதையை கடந்தவுடன் எழில் சூழ்ந்த பச்சை சதுரங்க கட்டங்களாக நெல்வயல்கள். அதன் மத்தியில் பெரியகுளத்தின் கரையில் கால் நீட்டிசயனித்திருக்கிறார் பெருமாள். இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன. முதலாவது ஊரின் முகப்பிலேயே உள்ளது இது அருணாசலேஸ்வரர் திருக்கோயில் மற்றொரு கோயில் பெரிய குளத்தின் கிழக்கு கரையில் சாலையோரம் உள்ளது இது விஸ்வநாதர் கோயில்.

வாருங்கள் முதலில் பேரொளி திகழ நெருப்பு தண்டாக இருக்கும் அருணாச்சலரை காண்போம். முதல் பந்திலேயே ஆட்டமிழக்கும் வீரரின் முகம் போலாகிறது நமக்கு முகப்பில் உள்ள மதில் சுவர் இடிந்து சரிந்து கிடக்கிறது. விநாயகர் முருகனுக்கான சிற்றாலயங்கள் இடிந்து இருக்குமிடம் தெரியவில்லை. தென்மேற்கில் சிதைக்கப்பட்ட ஒரு லிங்கமும் அதற்கான அம்பிகையும் உள்ளன. மையத்தில் பிரதான கோயில் இறைவன் அருணாசலேஸ்வரர் இறைவி உண்ணாமுலையம்மை தரை முதல் மேல்தளம் வரை கருங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

இருவரின் கருவறை விமானங்களில் பெருமரங்கள் வேர்பிடித்து நிற்கின்றன. இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் கோயில் கொண்டுள்ளனர். மூலமூர்த்தி நடுத்தர அளவுடைய லிங்கமூர்த்தி, அம்பிகை அழகான முகபாவம் கொண்டு நிற்கிறார். கருவறை வாயிலில் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டேசர் சூரியன் திருமால் என அனைத்து மூர்த்திகளும் முகப்பு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளனர்.

புராண முக்கியத்துவம் :

ஆபரணதாரி கிராமம், திருக்கண்ணங்குடியின் அகரம் என்பதற்கு சான்று உள்ளது என்கிறார்கள். கி.பி. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டுச் சான்றுப்படி இவ்வூர் அந்தணர்கள் நான்கு வேதங்கள் பயின்றவர்கள் திப்பய்ய தேவ மகாராயரின் கி.பி. 1474ம் ஆண்டின் கல்வெட்டில் சதுர்வேதமங்கலம் எனப்படுகிறது. கோவில் கருவறையை சுற்றி வருகையில் தென்புறம் சிலையில்லாத கோஷ்டத்தின் அருகே சனகாதி முனிவர் இருவரை காணலாம். சிவன் கோவில்களில் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி சிலைக்கு இருபுறமும் சனகாதி முனிவர்கள் நால்வர் சிலைகளும் அமைக்கப்படுவது வழக்கம். நின்ற கோலத்தில் பிரம்மனும் உள்ளார், அப்படியென்றால் இது சோழர் காலத்தில் கட்டப்பெற்ற சிவன் கோவிலாகத் தான் இருந்திருக்க வேண்டும்..பின் விஜயநகர ஆட்சியில் பெருமாள் கோவிலாக மாற்றப்பட்டிருக்கலாம்

காலம்

12 ஆம் நூற்றாண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆபரணதாரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top