அருள்மிகு குண்டாங்குழி மகாதேவர் திருக்கோயில், புதுச்சேரி
முகவரி
அருள்மிகு குண்டாங்குழி மகாதேவர் திருக்கோயில், மதகடிப்பட்டி, புதுச்சேரி – 605 106
இறைவன்
இறைவன்: குண்டாங்குழி மகாதேவர் இறைவி: அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்
புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் புதுச்சேரியிலிருந்து 24 கி.மீ தொலைவில் மதகடிப்பட்டு என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. திருபுவனை மகாதேவி சதுர்வேதி மங்கலம் என்று அன்னாளில் அழைக்கப்பட்ட இவ்வூர் காலப்போக்கில் தற்போது மதகடிப்பட்டு என்றழைக்கப்படுகிறது. இவ்வூரில் நெடுஞ்சாலையின் தென்புறத்தே சிறிது தொலைவில் முதலாம் இராஜராஜன் சோழர் எடுப்பித்த குண்டாங்குழி மகாதேவர் என்று அழைக்கப்படும் கோயில் அமைந்துள்ளது. அழகான கற்றளியாக விளங்கும் இக்கோயில் கி.பி.985லிருந்து 1016 வரை ஆட்சி செய்த முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்டது என இங்குள்ள ஒரு கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
புராண முக்கியத்துவம்
கருவறை சதுரமாகவும், இறை உருவமான லிங்கத்திருமேனி ஆவுடையின்றி பாணம் மட்டும் அமையப் பெற்று குண்டாங்குழி மகாதேவர் என்று அழைக்கப்படுகிறது. அம்மன் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இதன் விமானத்தில் அதிஷ்டானம், தூண்கள், சுவர்ப் பகுதி, பிரஸ்தாரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி ஆகிய அனைத்து உறுப்புகளையும் காணமுடிகிறது. இவை கலப்பு வேசர விமான வகையயைச் சார்ந்ததாகும்.அம்மன் திருமுன் மற்றும் இறைவனின் திருமுன் இரண்டையும் இணைக்கும் வகையில் முகமண்டபத்தின்தாங்குதளத்தின் கற்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது. முகமண்டபத்தில் அமர்ந்த நிலையில் காட்டப்படுள்ள நந்தி பிற்காலச் சேர்க்கையாகும். இவ்வளாகத்தில் சப்தமாதர்களுக்கென அமைக்கப்பட்டுள்ளதனி சன்னதிகள் சிதைந்து காணப்படுகிறது. சப்தமாதர் சன்னதிகள், சோழர்காலத்தில் சப்தமாதர்களின் வழிபாடு சிறந்து விளங்கியதை அறியமுடிகிறது. முகமண்டபத்தின் தாங்குதளம் குமுதம் வரையில் மட்டுமே காணமுடிகிறது. ஏனைய பகுதிகள் சிதைந்து காணப்படுகிறது.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மதகடிப்பட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
வில்லியனூர்
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி