Wednesday Dec 18, 2024

அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில் – கார்த்திகை நட்சத்திரம்

முகவரி

அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கஞ்சாநகரம், தரங்கம்பாடி தாலுக்கா, கீழையூர் வழி, நாகப்பட்டினம் மாவட்டம். Phone: +91 4364- 282 853, 94874 43351

இறைவன்

இறைவன்: காத்ர சுந்தரேஸ்வரர் இறைவி: துங்கபாலஸ்தானம்பிகை

அறிமுகம்

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, பிறந்த நட்சத்திரத்தன்றோ அவசியம் வழிபாடு செய்ய வேண்டிய தலம் நாகப்ப்ட்டினம் மாவட்டம் கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில். கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவித ஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்பது பொருள். கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்று பல காலமாக வழிபட்டு வந்த சுயம்பு மூர்த்தியே தற்போது ஸ்ரீகாத்ர சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் வணங்கப்படுகிறார். சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பது மிக முக்கிய சிறப்பாகும். மதுரை மீனாட்சியைப் போலவே இங்குள்ள அம்மன் துங்கபாலஸ்தானம்பிகை, கையில் கிளி ஏந்தி உள்ளாள். நாயன்மார்களில் மானக்ஞ்சார நாயனார் இத்தலத்தில் தான் அவதாரம் செய்து முக்தி அடைந்துள்ளர்.

புராண முக்கியத்துவம்

பத்மாசுரன், சிங்கமுகன் உள்ளிட்ட அசுரர்களால் பாதிக்கப்பட்ட முனிவர்களும், தேவர்களும் தங்களைக் காப்பாற்றும்படி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இவர்களது குறைபோக்க பார்வதி சிவனை வேண்டினாள். சிவபெருமான் காத்ரஜோதி (நெருப்பு வடிவம்) யோகம் பூண்டு தவம் செய்து கொண்டிருந்த காலம் அது. அம்மனின் வேண்டுதலால் தவம் கலைந்த சிவன், காத்ர சுந்தரேஸ்வரர் (கார்த்திகா சுந்தரேஸ்வரர்) என்னும் பெயர் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து ஆறு ஜோதிகள் புறப்பட்டன. அந்தப் பொறிகள் ஒன்றிணைந்து கார்த்திகேயன் ஆயின. முருகன் பிறக்க காரணமான, இத்தல இறைவனிடமிருந்து ஆறு தீப்பொறிகளின் காஞ்சனப்பிரகாசம் தோன்றியதால் இவ்வூர் காஞ்சன நகரம் என்று பெயர் பெற்றிருந்தது. காலப் போக்கில் கஞ்சாநகரம் (பொன் நகரம்) ஆனது. தான் தோன்றக் காரணமாக இருந்த இத்தல இறைவனை கார்த்திகேயன் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இத்தலம் கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தலமானது. கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவிதஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்று பொருள்.

நம்பிக்கைகள்

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது கார்த்திகை நட்சத்திரத்தன்றோ, பிரதோஷ நாட்களிலோ கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர் தலம் சென்று தீபம் ஏற்றி விசேஷ வழிபாடு செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது நம்பிக்கை. அதிலும் குறிப்பாக கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளி கிழமை மற்றும் கார்த்திகை நட்சத்திர நாட்களில் வேதாமிர்த் கீரம் எனப்படும் அம்மனின் கையிலுள்ள கிளியை தரிசனம் செய்தால் சிறந்த மண வாழ்க்கை அமையும். திருமணத்தில் தடை உள்ள கார்த்திகை நட்சத்திரப்பெண்கள் துங்கபத்திரா நதியின் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமண் நடக்கும் என்பது ஐதீகம்.

சிறப்பு அம்சங்கள்

சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பது மிக முக்கிய சிறப்பாகும்.மதுரை மீனாட்சியைப் போலவே இங்குள்ள அம்மன் துங்கபாலஸ்தானம்பிகை, கையில் கிளி ஏந்தி உள்ளாள். அத்துடன் தன் திருக்கரங்களில் நீலோத்பவ மலரும், சங்கு கரம் ஏந்தியும் அருள்பாலிக்கிறாள். சிவனே வேததிகளாக கீர சாத்ர கிளி வடிவில் அம்மனின் இடது தோளில் அமர்ந்திருப்பது சிறப்பு. இது வேதமோதும் கிளியாகும். இத்தல அம்மனை வியாசரும், சுகப்பிரம மகரிஷியும் வழிபாடு செய்துள்ளனர். நாயன்மார்களில் மானக்ஞ்சார நாயனார் இத்தலத்தில் தான் அவதாரம் செய்து முக்தி அடைந்துள்ளர். கார்த்திகைப் பெண்கள் அறுவரும் இங்குதான் அவதாரம் செய்தார்களாம்.

திருவிழாக்கள்

சித்திரை திருவிழா இங்கு விசேஷம். நவராத்திரி, திருவாதிரை.

காலம்

2000-3000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top