அங்காடி சமண கோயில், கர்நாடகா
முகவரி
அங்காடி சமண கோயில், அங்காடி, கர்நாடகா 577132
இறைவன்
இறைவன்: நேமிநாதர்
அறிமுகம்
இந்த இடத்தில் அமைந்துள்ள அங்காடி சமணக்கோயில் கர்நாடகாவின் உட்கேர் – சகலேஷ்பூர் சாலையில் பெல்லூரிலிருந்து 23 கி.மீ தூரத்தில் உள்ளது. அங்காடி என்பது கடை என்று பொருள்படும்., இது முதலில் “சாசகபுரா அல்லது சோசேவூர்” என்று ஹொய்சாலர்களால் அழைக்கப்பட்டது. அங்காடியில் ஐந்து கோயில்கள் இடிபாடுகளுடன் உள்ளன. அவைகளில் இரண்டு, சமண பாசாதிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள், 10 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று கூறப்படுகிறது. பாசதிகளில் ஒன்று “மகர சமணாலயம்” என்று அழைக்கப்படுகிறது, இது மாணிக்க பொய்சலாச்சாரியால் கட்டப்பட்டது. அதில் அமர்ந்திருக்கும் தோரணையில் சாந்திநாதரின் மகத்தான சிலை உள்ளது. இரண்டு பசாதிகளில் பெரியது நேமிநாதர் பசாடி என்று அழைக்கப்படுகிறது மற்றும் நேமிநாதர், சந்திரநாதர் மற்றும் கோமதேஸ்வரரின் உருவங்களைக் கொண்டுள்ளது, இந்த பசாதி முழுமையாக சிதைந்து உள்ளது. மற்ற மூன்று கோயில்களும் சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. இந்த கட்டுமானங்கள் ஹொய்சாலா பேரரசின் ஆரம்ப காலத்திற்கு சொந்தமானவை என்று செதுக்கல்கள் குறிப்பிடுகின்றன. வசந்திகா கோயிலுக்கு மிக அருகில் நேமிநாதக்கோயில் காணப்படுகிறது. இந்த கோயில் காட்டில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. நேமிநாதரின் சிலை சுமார் 8 அடி உயரமும் கருப்புக் கல்லால் ஆனது.
காலம்
10 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அங்காடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
பெல்காம்
அருகிலுள்ள விமான நிலையம்
பெல்காம்