அகரகொந்தகை கைலாசநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
அகரகொந்தகை கைலாசநாதர் சிவன்கோயில், அகரகொந்தகை, நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609703.
இறைவன்
இறைவன்: கைலாசநாதர்
அறிமுகம்
இவ்வூர் திட்டச்சேரி – திருமலைராயன் பட்டினம் இரண்டிற்கும் இடையில் உள்ளது ஊரின் வடக்கில் பிறையாறு ஓடுகிறது. அகரகொந்தகை, கொன்றை மரக்காடாக இருந்தமையால் கொன்றை என்ற பெயர் இருந்து மருவி இருத்தல் கூடும். இங்கு ஒரு கிழக்கு நோக்கிய ஒரு சிவாலயம் உள்ளது. கோயில் போதிய பராமரிப்பில்லை, பூஜைகளும் முறையாக நடைபெறுவதாக தெரியவில்லை. அருகாமை வீட்டில் இருப்போர் கூட கோயிலின் மேல் ஈடுபாட்டுடன் இருப்பதாக தெரியவில்லை. சிவாலய வழிபாடு குறித்த விளக்கங்களும், அதில் ஈடுபாட்டையும் ஆதீனகர்த்தர்கள் மற்றும் சொற்பொழிவாளர்களும், உழவார பணிமக்களும், மக்களிடையே உருவாக்க வேண்டும்.
புராண முக்கியத்துவம்
கோயிலின் கிழக்கில் ஒரு பெரிய குளமும் உள்ளது. கிழக்கில் ஒரு வாயில் இருந்தாலும் தென்புறம் உள்ள வாயிலே பிரதானமாக உள்ளது. நுழைவாயில் அழகிய சுதைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கியுள்ளார். அழகிய துவிதள விமானம் அழகு செய்கிறது. இறைவி தெற்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளார். இரு சன்னதிகளையும் ஒரு பெரிய மண்டபம் இணைக்கிறது. இந்த மண்டபத்தின் வெளியில் ஒரு தனி மண்டபத்தில் நந்தி உள்ளார்.தென்மேற்கில் விநாயகர் கிழக்கு நோக்கிய சிற்றாலயம் கொண்டுள்ளார். வடமேற்கில் முருகன் வள்ளி தெய்வானை சகிதம் உள்ளார். கருவறை கோட்டங்களில் தென்முகன் மற்றும் துர்க்கை உள்ளனர். சண்டேசர் வடபுறம் உள்ளார். வடகிழக்கில் ஒரு கிணறும், அருகில் நவக்கிரக மண்டபமும் உள்ளது. ஒரு மரத்தடியில் சிறிய மாடத்தில் பைரவர் மற்றும் சூரியன் உள்ளனர். #”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அகரகொந்தை
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி