ராம்நகர் கோதண்டராமஸ்வாமி திருக்கோயில், கோயம்புத்தூர்

முகவரி :
அருள்மிகு கோதண்டராமஸ்வாமி திருக்கோயில்,
ராம்நகர், கோயம்புத்தூர் – 641 009.
போன்: +91 422 2233926
இறைவன்:
கோதண்டராமஸ்வாமி
இறைவி:
சீதாதேவி
அறிமுகம்:
கோயம்பத்தூர் மாவட்டத்தில் ராம்நகரில் கோதண்டராமஸ்வாமி எழுந்தருளியுள்ளார். மூலவராக சீதாதேவி லட்சுமணர் சமேத ராமசந்திர மூர்த்தி கல்யாணகோலத்தில் எழுந்தருளி உள்ளார்.
புராண முக்கியத்துவம் :
தற்போது கோயில் அமைந்துள்ள ராம்நகர் 95 ஆண்டுகளுக்கு முன் விவசாய நிலப்பகுதியாக இருந்தது. அச்சமயத்தில் வக்கீல்கள், குமஸ்தாக்கள் கோவையின் பல்வேறு பகுதிகளில் வசித்துத் வந்தனர். இவர்கள் ஒன்று சேர்ந்து ஆலோசித்துத் அனைவரும் ஒரே இடத்தில் சேர்ந்து வசிப்பதற்காக முடிவு செய்து, மனு அளித்தனர். அதைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் தற்போதுள்ள ராம்நகர் பகுதியைத் தேர்வு செய்து அங்கீகாரம் வழங்கினார். அப்பகுதியில் வழிபாட்டுக்கு ஒரு கோயில் இல்லையே என்ற குறை இருந்து வந்தது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற வாக்குக்கு ஏற்ப கோயில் ஒன்றைக் கட்ட முடிவு எடுத்துத் அதற்காக 85 சென்ட் பரப்பளவு உள்ள நிலம் வாங்கப்பட்டது. கோயில் நிர்மாணிப்பதற்காக ஒரு குழுவை அமைத்தனர். கோதண்டராம ஸ்வாமி கோயில் கட்ட முடிவு செய்து, பொது மக்களிடம் நிதி வசூல் செய்து 5.2.1933-ம் ஆண்டு அன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தேறியது. மூலவராக சீதாதேவி லட்சுமணர் சமேத ராமசந்திர மூர்த்தி கல்யாணகோலத்தில் எழுந்தருளி உள்ளார். ராமருக்கு ஓர் கோயில் கட்டப்பட்டது. அதன்பின்னர் இப்பகுதி, ராம் நகர் என அழைக்கப்பட்டு வருகிறது.
நம்பிக்கைகள்:
ராமர் சன்னிதியில் நடக்கும் திருமணத்திற்காக, பெண்பார்க்கும் படலத்தில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால், அவர்களுக்கு ஏற்பட்டிருந்த சகல தோஷங்களும் தடைகளும் நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.








காலம்
500-1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ராம்நகர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கோயம்புத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்புத்தூர்