Wednesday Jul 24, 2024

நீடாமங்கலம் சந்தான ராமசுவாமி திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு சந்தான ராமசுவாமி திருக்கோயில், நீடாமங்கலம், திருவாரூர் – 614404. போன்: +91 94448- 54208

இறைவன்

இறைவன்: சந்தான ராமசுவாமி இறைவி: சீதை

அறிமுகம்

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் நகரில் அமைந்துள்ள சந்தான ராமசுவாமி கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். நீராடுமங்கலம் என்றதே பின்னாளில் நீடாமங்கலம் என மறுவியுள்ளது. (1705ம் ஆண்டு சரபோஜி மன்னன் யமுனாம்பாளுடன் சகேத தீர்த்தில் நீராடியதால் இப்பெயர் பெற்றுள்ளது)

புராண முக்கியத்துவம்

உருவ வழிபாட்டில் நின்ற திருக்கோலம். பள்ளி கொண்ட(சயன) திருக்கோலம், அமர்ந்த திருக்கோலம் என்ற மூன்று வகையில் பெருமாள் ஆங்காங்கு எழுந்தருளி உள்ளார். இந்த கோயிலில் மூலவரும் உற்சவரும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். பிரதாப சிம்ம மகாராஜா 1739-ம் ஆண்டு முதல் 1763-ம் ஆண்டில் அவருடைய காலத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் கீர்த்தி மானாக விளங்கியவர் வெங்கோஜியின் புதல்வர். இவர் 24 ஆண்டுகள் அரசு புரிந்துள்ளார். படிப்படியாக கோயில் வளர்ச்சிப் பெற்றுள்ளது. 1924-ம் ஆண்டு சம்ப்ரோஷனம் நடந்துள்ளது. 1956-ம் ஆண்டு மகா சம்ப்ரோஷனம் நடந்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கோயில் உள்ளே முன் மண்டபம், வலதுபக்கம் வசந்த மண்டபம், மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரம், உள் பிராகாரத்தில் கொடி மரம், பலி பீடம் உள்ளது. உள் பிராகாரத்தின் கிழக்கில் கொடி மரம், தென் கிழக்கில் மடப்பள்ளி, வட கிழக்கில் யாகசாலை அமைந்துள்ளது. மேற்கே அகலமான சன்னிதியில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், ஸ்ரீமந்நிகமாந்த மகாதேசிகன் உள்ளிட்ட விக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாகன மண்டபம், கச்சேரி மண்டபங்களும் உள்ளன. கோயில் உள்ளே பெருமாள் சன்னிதிக்கு முன்பாக நடுவில் மகா மண்டபம் அதன் தெற்கில், கிழக்கில் வாயில்கள் அøமைந்துள்ளது. கருடன் பெருமாளுக்கு நேர் எதிரில், அனுமர், சேனை முதலியோர் சன்னிதிகள் வடக்கில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. தெற்கு நோக்கி அனுமர், மூலஸ்தனத்தில் திரயங்க விமானத்தில் சந்தான ராமசாமி சீதை, லட்சுமுணர் ஆகியோர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். உற்சவர்கள் மூலவருக்கு முன்னே சந்தான ராமர், சீதை, லட்சுமுணர், அனுமர், சயன சந்தான கோபாலன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். விமானத்திற்கு வெளியில் தெற்கு பாகத்தில் தும்பிக்கை ஆழ்வார், வடக்கில் துர்க்கை அருள்பாலிக்கின்றனர். கோயிலுக்குள் இரண்டு பிராகாரங்கள், வெளியில் தேரோடும் வீதியும் உள்ளது. கோயில் வட கலை பாஞ்சராத்ர முறையில் ஏற்பட்டுள்ளது. கோயிலில் அனுமருக்கு தனி சன்னிதி உள்ளது.

நம்பிக்கைகள்

புத்திரபாக்கியத்திற்கு சிறப்பு பரிகாரஸ்தலம், சகல ஐஸ்வர்யங்கள், செல்வ வளம் மற்றும் மனை அமைதிக்கும் உரிய சிறப்பு ஸ்தலம் என்பதால் பக்தர்கள் அதிகமானோர் வந்து பிரார்த்திக்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

மகாராஷ்டிர இராஜ்ஜியத்தை ஆதியில் உருவாக்கிய வெங்கோஜி மகாராஜாவின் பரம்பரையில் தோன்றிய ப்ரதாபசிம்ம மகாராஜா நீடா மங்கலம் என்னும் இவ்வூரில் இரண்டு கோயில்களும், சத்திரம் ஒன்றையும் 1761-ம் ஆண்டில் கட்டினார். இதில் சந்தானராமசாமியான இக்கோயிலுக்கு காசி விஸ்வநாதர் கோயிலும் பெருமை சேர்க்கிறது. திருகாவிரி பாயும் சோழவளநாடு. இதற்கு வளநாடு, சென்னி நாடு, அபயநாடு, செம்பியநாடு, பொன்னிநாடு என்று வழங்கும் சோளணுதேசமாகும். இந்த தேசத்தில் கோயில்கள் பல உள்ளன. அவைகளில் புராணங்கள் நிறைந்தவை, தனிப்பாடல், ஆழ்வார்கள் மற்றும் ஆன்றோர்களால் பாடல் பெற்ற கோயில்கள் பல அடங்கியுள்ளன. இவைகளில் தஞ்சை அரசனான பிரதாபசிம்ம மகாராஜாவால் அமைக்கப்பட்ட அபிமான கோயிலாக விளங்குவது தலத்திற்கு சிறப்பாகும்.

திருவிழாக்கள்

ராமநவமி உற்சவம்(பங்குனியில்), ஆடிப் பூரத்தில் தெப்ப உற்சவம், ஆவணியில் பவித்ர உற்சவம், புரட்டாசியில் நவராத்திரி, மார்கழியில் அத்யயான உற்சவம் போன்ற திருவிழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

காலம்

1739-17632

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நீடாமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நீடாமங்கலம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top