Tuesday Oct 08, 2024

நாகலாபுரம் வேதநாராயணப் பெருமாள், ஆந்திரப்பிரதேசம்

முகவரி

நாகலாபுரம் வேதநாராயணப் பெருமாள், நாகலாபுரம், சித்தூர் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம் – 517589.

இறைவன்

இறைவன்: வேதநாராயணப் பெருமாள் இறைவி: பத்மாவதி, ஸ்ரீதேவி-பூதேவி

அறிமுகம்

ஸ்ரீ வேதநாராயண கோயில் அல்லது மத்ஸ்ய நாராயண கோயில் என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் நாகலபுரம் நகரில் அமைந்துள்ள கோயில் ஆகும். இந்த கோயில் விஷ்ணுவிற்கு மச்ச (மீன்) அவதாரம் வடிவத்தில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மேலும் இது மத்ஸ்ய நாராயணா அல்லது வேத நாராயணா என்று குறிப்பிடப்படுகிறது. பெருமாளின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்ச அவதாரமாக பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் மிக அற்புதமான அரிதான தலம் நாகலாபுரம் தலமாகும். நமது “ஸநாதன தர்மத்துக்கு’ ஆதாரமானவை வேதங்களே! நான்மறைகள் இல்லையேல் நமது மதமே இல்லை. காக்கும் கடவுளான திருமால், தர்மத்தை நிலை நாட்டப் பல அவதாரங்கள் எடுத்திருப்பினும், அவற்றுள் வேதங்களைக் காத்த பெருமையினால் பெரிதும் போற்றப்படுவது மத்ஸ்ய ரூபத்தில் (மீன் உருவம்) எடுத்த அவதாரமே! ‘தசாவதாரங்களில்’ இதுவே முதன்மையானது. அது மட்டும் அல்லாமல் மிகவும் சிறப்பான அமைப்பான இறைவன் தன கையில் சுதர்சன சக்கரத்தை செலுத்துவதிற்கு தயாராக உள்ள நிலையில் இத்தலத்தில் அருள் பாலிக்கின்றார் . இந்த மச்ச அவதார நோக்கமே அசுரர்களால் திருடப்பட்ட வேதங்களை காப்பாற்ற எடுத்த அவதாரமாகும் .

புராண முக்கியத்துவம்

ஒரு யுகம் முடிவு அடைய போகும் கால கட்டத்தில் பிரம்மாவுக்கு உறக்கம் ஏற்பட்டது.அவர் கண்களை மூடி வாயை திறந்து தூங்கும் போது அவர் வாயில் இருந்து வேதங்கள் வெளி வந்து விழுந்தன. அவற்றை அசுரரான சோமகுரு என்ற அசுரன் அதை திருடி எடுத்து சென்றுவிட்டான் . இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரம்மா மற்றும் தேவர்கள் இருந்தால் தான் புது யுகத்தை உருவாக்க முடியும் அதில் எல்லா உயிரினங்களை படைக்க முடியும் என்று கூறினார். மத்திய புராணத்தில் இந்த மச்ச அவதாரத்தை பற்றி கூறியுள்ளார்கள். விஷ்ணுவின் பக்தரான சத்தியவரதா சந்தியா வந்தனம் செய்யும் போது அந்த கமண்டலத்தில் இருந்து சிறிய மீனாக தோன்றிய பெருமாள் படிப்படியாக ஒரே நாளில் பெரிய மீனாக உருவெடுத்தார். பகவான் தன் மச்ச அவதாரத்தின் மூலம் அசுரன் சோமகுருவை அழித்து வேதங்களை திரும்ப பெற்றார் . அவற்றை பிரம்மாவிடம் ஒப்படைத்தார். பிரம்மா தன் படைக்கும் தொழிலால் ஒரு புதிய யுகத்தை உருவாக்கினார். முதல் அவதாரமாகிய மச்சாவதாரக் கோலத்திலேயே திருக்கோயில் கொண்டு அருள்புரியும் திருமால் ஆலயத்தை, இந்த நாகலாபுரத்தில் காணலாம். இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று. பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும். மூலவராக தனி சந்நிதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே என்கின்றனர். 16ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால், அவர் தம் தாயின் நினைவாக இக்கோயில் கட்டப்பட்டது. இவ்வூரான நாகலாபுரம் என்ற பெயரானது தன் அம்மா பெயரான நாகமா என்ற பெயரை ஞாபகப்படுத்துமாறு வைத்தார். மூலவர் வேதநாராயணப் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியுடன் காட்சி தருகிறார். திருமாலின் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் வேதவல்லித் தாயார், லட்சுமி நரசிம்மர், வீரஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர், ராமபிரான் ஆகிய தெய்வங்களுக்கு தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. திருச்சுற்று மதிலுடனும், ராஜகோபுரங்களுடனும் ஒரு பெரிய ஆலயமாகவே இது திகழ்கிறது.

சிறப்பு அம்சங்கள்

இக்கோயில் மேற்கு அமைந்துள்ளது .சூரியனது கதிரானது ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 12 ,13 ,14 ஆம் தேதிகளில் மாலை 6 மணி முதல் 6.15 மணி வரை இறைவனின் மீது படும் .அதுவும் முதல் நாளில் கதிர்கள் தெய்வத்தின் அடிவாரத்திலும், இரண்டாவது நாள் நாவலிலும், மூன்றாம் நாள் கிரீடத்திலும் விழுகிறது.

திருவிழாக்கள்

சூரிய பூஜை உற்சவம் கோயிலின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும்.

காலம்

16 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

திருமலை திருப்பதி தேவஸ்தானம்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நாகலாபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சித்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருப்பதி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top