Saturday Oct 05, 2024

திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில், திருவெள்ளியங்குடி, தஞ்சை மாவட்டம்-612 102. போன்: 0435-2943152 ,செல்: 9443396212, 9345794354 (எஸ்.ராமமூர்த்தி பட்டாச்சாரியார்

இறைவன்

இறைவன்: கோலவில்லிராமன் இறைவி: மரகதவள்ளி தாயார்

அறிமுகம்

திருவெள்ளியங்குடி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில்அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும். இது ஆழ்வார்களால் பாடற்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. வாமனாவதராதத்துடன் தொடர்புடைய இத்திருத்தலம் நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்ட திருத்தலம். பிரம்மாண்டபுராணமும், விஷ்ணு புராணமும் இத்தலம் குறித்த ஏராளம் தகவல்களைத் தெரிவிக்கின்றன.

புராண முக்கியத்துவம்

நவகிரகங்களில் சுக்கிரனாகிய வெள்ளி இத்தல பெருமானை தவமிருந்து வழிபட்டமையால் இந்த ஊர் வெள்ளியங்குடி என்ற பெயர் பெற்றது. சுக்ரபுரி என்றும் அழைப்பர். வாமனனாக அவதாரம் எடுத்து வந்த திருமாலுக்கு மூன்றடி மண் தானமளிக்க தயாரானார் மகாபலிச் சக்ரவர்த்தி. வந்திருப்பது சாதாரணச் சிறுவன் அல்ல என்று மகாபலிக்கு உணர்த்தினார் சுக்ராச்சாரியார். ஆனால் அதைக் கேட்கும் மன நிலையில் மகாபலிச் சக்ரவர்த்தி இல்லை. மகாபலி நீர் வார்த்து தானம் தரவிருக்கும் கமண்டல பாத்திரத்தின் நீர் வரும் துளையை ஒரு வண்டாக உருமாறி அடைத்து கொண்டார் சுக்ராச்சாரியார். இதை அறிந்த பகவான் நீர் வரும் தூவாரத்தை ஒரு குச்சியால் குத்த ஒரு கண்னை இழந்தார் சுக்ராசாரியர். மீண்டும் இத்தல பெருமானை நோக்கி தவமிருந்து இழந்த கண்னை பெற்றார். அசுரர்களுக்கு தச்சராக இருந்த மயன் தவமிருந்து திருமாலை வேண்ட சங்குசக்கரதாரியாக காட்சி தந்தார். பரமாத்மா இராமபிரானாக காட்சி அளிக்குமாறு வேண்டினார். திருமாலும் இராமபிரானாக காட்சி தந்தார். பராசரன், மார்க்கண்டேயர், இந்திரன், பிரம்மா, பூமிதேவி ஆகியோர் வழிபட்ட புண்னிய தலம். இந்த ஒரு தலத்தை தரிசித்தால் 108திவ்வியதேச க்ஷேத்திரங்களை தரிசித்த புண்ணியம் கிடைத்து விடும். மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது இறைவன் என்பதை அறியாத மன்னன் தாரை வார்த்து கொடுக்க சம்மதிக்கிறான். ஆனால், உண்மைநிலை அறிந்த அசுர குல குரு சுக்கிராச்சாரியார், தாரை வார்க்கும் செம்புக்குடத்தின் துவாரத்தை ஒரு வண்டாக உருவெடுத்து அடைத்து விட்டார். குருவின் இந்த செயல் அறிந்த பகவான் ஒரு குச்சியால் துவாரம் வழியாக குத்த, ஒரு கண்ணை இழக்கிறார் சுக்கிரன்.ஒளியிழந்த கண்ணுடன் பல தலங்களுக்கு சென்று வழிபட்டு கடைசியாக இத்தலத்து பெருமாளை வழிபட்டு மீண்டும் பார்வை பெற்றார். இதனால் தான் இத்தலம் வெள்ளி(சுக்கிரன்)யங்குடி என அழைக்கப்படுகிறது.சுக்கிரன் இத்தலத்தில் வந்து தவம் செய்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தேவ சிற்பியான விஸ்வகர்மா பெருமாளுக்கு அழகாக கோயில்களை கட்டி முடித்தார். இதே போல் தன்னால் கோயில்கள் கட்ட முடியவில்லையே என அசுர குல சிற்பி மயன் வருத்தப்பட்டு பிரம்மனிடம் வேண்டினார். அதற்கு பிரம்மா இத்தலத்தில் கடும் தவம் செய்தால் பெருமாள் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்,” என கூறினார். மயனின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் சங்கு சக்ரதாரியாக காட்சி கொடுத்தார். ஆனால் மயன்,””தனக்கு இந்த தரிசனத்திற்கு பதில், ராமாவதார காட்சி வேண்டும் என்றான். தன் கரத்திலிருந்த சங்கு சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு கோலவில்லி ராமனாக வில் அம்புகளுடன் தரிசனம் தந்தார் பகவான். இப்படிப்பட்ட பெருமைக்குரிய தலத்தில் தவமிருக்க விரும்பி இங்கு வந்தார் சுக்கிராச்சாரியார். இதன் காரணமாகவும் இது “வெள்ளியங்குடி’ ஆயிற்று.

நம்பிக்கைகள்

கண்ணில் குறைபாடு உள்ளவர்கள், திருமண தடை உள்ளவர்கள், புத்திர பாக்கியம் வேண்டுவோர் இங்கு வழிபட்டால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை.சுக்கிரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இந்த பெருமாளை தரிசித்தால் 108 திருப்பதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தனக்கு கண்ணில் ஒளி தந்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில், சுக்கிர பகவான் அணையா தீபமாக இத்தலத்தில் இரவு பகலாக பிரகாசித்து கொண்டிருக்கிறார். எனவே இத்தலம் நவக்கிரகத்தில் சுக்கிரத்தலமாக போற்றப்படுகிறது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இங்கு மட்டும் தான் கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக் கிறார்.இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம். பெருமாளின் 108 திருப்பதிகளுள் இங்கு மட்டும் தான் கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம். இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 22 வது திவ்ய தேசம்.

திருவிழாக்கள்

ராமநவமி, கோகுலாஷ்டமி, நவராத்திரி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவெள்ளியங்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top