Saturday Jun 15, 2024

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி

அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர்-605 402 விழுப்புரம் மாவட்டம். போன்: +91- 4146-223 379, 98430 66252.

இறைவன்

இறைவன்: அபிராமேஸ்வரர் இறைவி: முத்தாம்பிகை

அறிமுகம்

திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர்ஆகிய மூவரதும் தேவாரப் பாடலும் அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்றது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இத்தலம் இந்தியாவில் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்தில் அமைந்துள்ளது. விழுப்புரம் அருகே உள்ளது திருஆமாத்தூர். முருகன், திருமகள் எல்லாம் இத்தலத்தில் வழிபட்டு அருள் பெற்றவர் என்பது புராண வரலாறு. இவரை இராமன் இலங்கையிலிருந்து திரும்பும்போது வழிபாடு செய்திருக்கிறான். அதனால் ‘இராமனும் வழிபாடு செய்யும் ஈசன் இவர்’ என்பது அப்பர் பாடியுள்ளார். ஞானசம்பந்தர், அப்பர் இருவரையும் தவிர சுந்தரராலும் பாடப் பெற்றவர் இவர்.

புராண முக்கியத்துவம்

ஒரு காலத்தில் பசுக்களுக்கு கொம்புகள் இல்லாமல் இருந்தது. இதனால் பசுக்களை கொடிய விலங்குகள் கொடுமைப்படுத்தி வந்தன. வருத்தமடைந்த பசுக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சிவனை வேண்டி கொம்புகளை பெற்ற தலம் தான் திரு+ஆ+மத்தூர். இத்தலத்தை பசுக்களின் தாய் ஊர் என்பார்கள். பசுவின் உடலில் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள் வசிக்கின்றனர். பசுவே வந்து இங்குள்ள இறைவனை பூஜித்ததால் இத்தலம் மிகவும் பெருமை பெற்றது. இத்தல இறைவன் அபிராமேஸ்வரர் பசுவின் கால் குளம்பை தன் தலையில் தாங்கியபடி அருள்பாலிக்கிறார்.

நம்பிக்கைகள்

திருமணத்தடை நீங்க, புத்திர பாக்கியம் கிடைக்க இங்குள்ள முத்தாம்பிகையை பிரார்த்திக்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

ராவணனை வதம் செய்த ராமன் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க இங்கு சிவனுக்கு தண்ட தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தார். சூரபத்மனை அழிப்பதற்காக முருகன், இங்குள்ள சிவனையும் பார்வதியையும் வணங்கியுள்ளார். பார்வதி தனது சக்தி வேலை முருகனுக்கு கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தார். இத்தல இறைவனை விநாயகர், முருகன், பார்வதி, ராமர், சீதை, லட்சுமணன், நாரதர், அகத்தியர், வசிஷ்டர், துர்வாசர், பிருகு முனிவர், பராசரர், விஸ்வாமித்திரர், வியாசர், உரோமசர், மதங்க முனி, அஷ்ட வசுக்கள் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். ஈசனை மட்டுமே வழிபட்டு வந்த பிருங்கி முனிவர் பார்வதி தேவியின் சாபத்தால் வன்னி மரமாக மாறிவிட்டார். அவரே இத்தலத்தின் தல விருட்சமாக சுவாமி, அம்மன் சன்னதிக்கு இடையே அருள்பாலிக்கிறார்.

திருவிழாக்கள்

நவராத்திரி, சிவராத்திரி, சித்திரை திருவிழா

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

விழுப்புரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

விழுப்புரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top