Saturday Jul 27, 2024

திருப்புரக்கோவில் தீர்த்தகிரீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

திருப்புரக்கோவில் தீர்த்தகிரீஸ்வரர் சிவன்கோயில், திருப்புரக்கோவில், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ தீர்த்தகிரீஸ்வரர் இறைவி: ஸ்ரீ திரிபுரசுந்தரி

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கிராமம். சிறிய பாறை குன்றின்மேல் இடிந்த நிலையில் ஒரு கோயில் காணப்படுகிறது. கோயில் கருவறையில் சிவலிங்கமும், அருகிலேயே அம்பாள் விக்கிரகமும் உள்ளன. சுவாமி நாமம் ஸ்ரீ தீர்த்தகிரீஸ்வரர். அம்பாள் ஸ்ரீ திரிபுரசுந்தரி. சதுர வடிவ ஆவுடையாரில் காட்சி கொடுக்கிறார் சுவாமி. நர்மதை பாணம் போல் தோன்றுகிறது.. வெளியில் நந்தி தேவர் சிலை காணப்படுகிறது. ஒரு சுனையும் இங்கு இருக்கிறது.குன்றின் அடிவாராத்தில் மிகவும் தொன்மையான விநாயகர் சிலை ஓன்று இருக்கிறது. இங்கு பூஜை ஏதும் நடைபெறவில்லை. தென் திசையில் மற்றொரு குன்றின் மேல் ஒரு கோயில் தெரிகிறது.. மூலவர் ஸ்ரீ விநாயகர். பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகிய கோஷ்ட மூர்த்திகள் உள்ளனர். நவகிரக சன்னதியும் இங்கு இருக்கிறது. இக்கோயிலில் ஒரு வேளை பூஜை நடைபெறுகிறது. திருக்குளம் அருகில் காணப்படுகிறது. தொடர்புக்கு திரு ஸ்ரீநிவாசன்-9843429565, திரு பார்த்திபன்-9840981195, திரு சங்கர்-9677226346. செய்யூரிலிருந்து 6 கி.மி தொலைவில் உள்ளது. பேருந்து செய்யூர்-மதுராந்தகம்

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

செய்யூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மேல்மருவத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top