Saturday Jul 27, 2024

ஜபுங் புத்தர் கோவில், இந்தோனேசியா

முகவரி

ஜபுங் புத்தர் கோவில், தூசன் கேண்டி, ஜபுங் கேண்டி, பைட்டன், புரோபோலிங்கோ, கிழக்கு ஜாவா 67291, இந்தோனேசியா

இறைவன்

இறைவன்: புத்தர்

அறிமுகம்

ஜபுங் கோயில் 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு புத்த கோயில் ஆகும். இக்கோயில் இந்தோனேஷியாவில் கிழக்கு ஜாவாவில் புரோபோலிங்கோ மாவட்டத்தில் பைட்டன் பகுதியில் ஜபுங் சிசிர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் 16.20 மீட்டர் அளவிலான சிவப்பு செங்கல்லால் ஆனது. இந்தக் கோயிலைப் பற்றிய குறிப்பு பஜ்ராஜினபராமிதா புரா (வஜ்ர ஜினா பராமிதா புரா) என்று நகரக்ரேதகமாவில் காணப்படுகிறது. இது கயாம் ஊருக் என்ற மன்னரால் கி.பி. 1359 ஆம் ஆண்டில், அவர் கிழக்கு ஜாவா பகுதி முழுதும் சென்றபோது பார்வையிடப்பட்ட கோயிலாகும். இக்கோயில் பராரட்டனில் சஜாபுங் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த கோயிலின் கட்டிடக்கலை பாணி வடக்கு சுமத்ராவின் பதங் லாவாஸில் உள்ள பகால் கோயிலை ஒத்த நிலையில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம்

இக்கோயில் வளாகம் 35 x 40 மீட்டர் அளவில் காணப்படுகிறது.1983 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கோயில் மறுசீரமைப்புக்கு உட்பட்டது, மேலும் கோயில் வளாகம் 20.042 சதுர மீட்டர் பரப்பளவில் கடல் மட்டத்திலிருந்து 8 மீட்டர் உயரத்தில் விரிவுபடுத்தப்பட்டது. கோயில் வளாகம் இரண்டு கட்டமைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது; ஒரு முதன்மைக் கோயிலும், முதன்மைக்கோயிலின் கட்டமைப்பிலிருந்து தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள ஒரு மூலைக்கோயிலும் இங்கு உள்ளன. முதன்மைக் கோயிலானதுஉயர்தர சிவப்பு செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டதாகும். அவற்றில் சில பகுதிகள் புடைப்புச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. முதன்மைக் கோயில் 16.20 மீட்டர் உயரத்துடன் 13.13 மீட்டர் மற்றும் 9.60 மீட்டர் அளவைக் கொண்டு அமைந்துள்ளது. ஜபுங் கோயில் மேற்கு நோக்கி உள்ளது, மேற்கு பகுதியில் ஒரு திட்டமிடப்பட்ட கட்டமைப்பு காணப்படுகிறது. இது உயரமான மேல் மேடையில் பிரதான அறை வரை படிக்கட்டுகளின் வழி செல்லும் வகையில் உள்ளது. மூலைக் கோயில், முதன்மைக் கோயிலின் கட்டட அமைப்பின் தென்மேற்கு பகுதியில், 2.55 மீட்டர் அகலமும் 6 மீட்டர் உயரமும் கொண்டு அமைந்துள்ளது. இந்த அமைப்பினை ஒரு கோயில் என்று கூற முடியாது. தற்போது சிவப்பு செங்கல் சுவர்களைக் கொண்டு எஞ்சியிருக்கும் ஒரே ஒரு கோபுரம் ஆகும். ஒரு காலத்தில் இங்கு உள் சுற்றுச்சுவர் இருந்திருக்க வாய்ப்புண்டு. இந்த கோயில் நான்கு பாகங்களைக் கொண்டுள்ளது. அவை படூர் (அடிப்படை தளம்), கால், உடல் மற்றும் கூரை என்பனவாகும். உடல் அமைப்பு கிட்டத்தட்ட உருளை எண்கோணமானது. அது மூன்று படி செவ்வக தளங்களில் நிற்கிறது. கூரையின் வடிவம் உருளை குவிந்த மேற்பரப்புடைய கோபுரம் போன்ற அமைப்பினைக் கொண்டுள்ளது. அதில் அலங்கரிக்கப்பட்ட கொண்டு சூலூர் மலர் காணப்படுகிறது. எனினும் கூரை மேல் பாகங்களை பெரும்பாலும் அழிக்கப்பட்டிருக்கிறது. கருவறையில் (பிரதான அறை) ஒரு பீடம் உள்ளது, அங்கு முன்பு ஒரு புத்தர் சிலை இருந்திருக்கலாம். நுழைவு வளைவின் மேல் பகுதியில் 1276 சாகா பொறிக்கப்பட்டுள்ளது.அந்த ஆண்டு மன்னர் ஹயம் வுருக் ஆட்சி செய்த,1354 ஆம் ஆண்டினைக் குறிக்கும் வகையில் ஒத்து அமைந்துள்ளது.

காலம்

14 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கிராக்ஸான்

அருகிலுள்ள இரயில் நிலையம்

புரோபோலிங்கோ நிலையம்

அருகிலுள்ள விமான நிலையம்

மலாங்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top