Tuesday Oct 08, 2024

சிவன்பேட்டை உத்திராபதீஸ்வரர் சிவன்கோயில்

முகவரி

சிவன்பேட்டை உத்திராபதீஸ்வரர் சிவன்கோயில், சிவன்பேட்டை, சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம்

இறைவன்

இறைவன்: உத்திராபதீஸ்வரர்

அறிமுகம்

சிதம்பரம் – பரங்கிபேட்டை சாலை ஊருக்குள் நுழையும் முன்னர் புதுசத்திரம் சாலை பிரிகிறது இதில் சற்று மேற்கு நோக்கி ஒரு சிறு தார் சாலை பரங்கிபேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த தார் சாலையில் சிறிது தூரம் சென்றால் பெரிய கடலை கொல்லையில் நடுவில் கிழக்கு நோக்கிய கோயில் ஒன்றுள்ளது. அது தான் நாம் காண இருக்கும் சிவன் பேட்டை கோயில். இறைவன் இறைவி இருவரின் கருவறை தவிர பிற முகப்பு மண்டபங்கள் இடிந்து வானம் பார்க்கின்றன. முக்கண்ணனின் மூன்று கண்களாக மூன்று பனைமரங்கள் கோயிலை ஒட்டி நிற்கின்றன. கருவறை துவாரபாலகனாய் ஓர் உயர்ந்த அத்திமரம் கோயிலை தன் வேர்களால் கட்டி காக்கிறது இறைவன் உத்திராபதீஸ்வரர் சதுர பீடத்தில் சற்று நடுத்தர அளவிலான லிங்க மூர்த்தியாக காட்சியளிக்கிறார். அருகில் ஒரு மாடத்தில் பைரவர் சற்று சிதிலமடைந்தவாறு உள்ளதை காண்கிறோம், கருவறையில் அம்பிகை இல்லை, விநாயகர் இல்லை, சண்டேசர் இல்லை நேர் எதிரில் நந்தி மட்டும் யாரோ ஒரு பக்தர் கொடுத்த நிழலில் இறைவனை நோக்கியபடி அமர்ந்திருக்கின்றார். எத்தனையோ இடர்பாடுகளை கடந்தும் இறைவன் இன்னும் இங்கு வீற்றிருக்கிறார் என்றால் அவர் ஒருவரின் கரங்களால் திருப்பணி பெற காத்திருக்கிறார் என்று தான் பொருள் அந்த ஒருவர் யாரோ? # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000

நிர்வகிக்கப்படுகிறது

.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பரங்கிபேட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

சிதம்பரம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top