Wednesday Dec 04, 2024

கோட்டூர் கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் கோட்டூர் அஞ்சல்-614 708. மன்னார்குடி வட்டம். திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4367 – 279 781, 97861 51763.

இறைவன்

இறைவன்: கொழுந்தீஸ்வரர், கொழுந்தீசுவரர், இறைவி: சமீவனேஸ்வரர் மதுரபாஷினி

அறிமுகம்

கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி தென்கரைத்தலங்களில் 111ஆவது சிவத்தலமாகும். திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி இடையில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள இறைவன் கொழுந்தீஸ்வரர்,இறைவி மதுரபாஷிணி.

புராண முக்கியத்துவம்

விருத்திராசுரன் என்ற அரக்கன் தேவர்களை மிகவும் துன்புறுத்தினான். இதனால் வருத்தமடைந்த இந்திரன் பிரம்மனிடம் முறையிட்டான். அதற்கு பிரம்மா, “”இந்திரனே! ததீசி என்ற முனிவரின் முதுகெலும்பை பெற்று அதை வஜ்ராயுதமாக்கி அதன் மூலம் மட்டுமே அரக்கனை கொல்லமுடியும். அவரது முதுகெலும்பு மிகவும் பலமானதா விளங்குவதற்கு காரணம் உள்ளது. முன்னொரு காலத்தில் திருப்பாற்கடல் கடைவதற்கு முன்பாக தேவர்கள் அனைவரும் தத்தமது ஆயுதங்களை இந்த முனிவரிடம் ஒப்படைத்து பத்திரமாக வைத்திருக்க வேண்டினார்கள். இவர் அனைத்து ஆயுதங்களையும் தன் வாயில் போட்டு பத்திரப்படுத்திவிட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். இவரது தவத்தின் சக்தியால் அனைத்து ஆயுதங்களும் உருகி அவரது முதுகெலும்பில் சேர்ந்துவிட்டன. இதனால் அவரது முதுகெலும்பு மிகவும் பலமுள்ளதாகிவிட்டது,’என்றார். இந்திரனும் அதன்படி முனிவரது முதுகெலும்பை வஜ்ராயுதமாக்கி அரக்கனை கொன்றான். முனிவரை கொன்று முதுகெலும்பை பெற்றதால், இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷத்தை போக்க தேவகுருவை நாடினான். அவரும்,””இந்திரனே! நீ பூவுலகில் சிவதல யாத்திரை செய்து சிவபூஜை செய். அப்போது, தேவர்கள் அமுதம் பெறும் போது சிந்திய அமுதத்துளியால் உண்டான வன்னிமரத்தின் அடியில் சிவலிங்கம் இருக்கும். இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் உனது தோஷம் நீங்கும்,’என்றார். அதன்படி இந்திரன் இங்கு தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றான். இந்திரன் பூஜித்ததால் இத்தலம் இந்திரபுரம் என்றும், ஐராவத யானை பூமியில் கோடு கிழித்ததால் கோட்டூர் என்றும் அழைக்கப்பட்டது.

நம்பிக்கைகள்

இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபடுபவர்களின் பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அருகில் கீழ்கோட்டூர் மணி அம்பலம்- திருவிசைப்பா தலம். பிரதோஷ மூர்த்தி மூல மூர்த்தியாக இருப்பது சிறப்பு.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 175 வது தேவாரத்தலம் ஆகும். தேவலோக மங்கை ரம்பை இந்திர லோகத்தில் செய்த தவறுக்காக பூமிக்கு செல்லும்படி சபிக்கப்பட்டாள். அவள் மீண்டும் இந்திர லோகம் செல்வதற்காக இத்தலத்து ஈசனை நோக்கி இடது கால் ஊன்றி, வலது கால் மடித்து, உள்ளங்காலில் இடது கையை வைத்து, வலது கையை தலைமேல் வைத்தபடி அக்னியில் நின்று தவம் செய்துள்ளாள். பிரதோஷ கால மூர்த்தி இங்கு தனி சன்னதியில் சிலை வடிவில் உள்ளது. மாசி மகத்தன்று இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால், லிங்கத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவம் தெரிவதை இன்றும் பார்க்கலாம்

திருவிழாக்கள்

வைகாசி விசாகம் பிரமோற்ஸவம். ஆடிப்பூரம். நவராத்திரி. திருக்கார்த்திகை.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கோட்டூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சிராப்பள்ளி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top