Sunday Jul 21, 2024

கூழம்பந்தல் பேசும் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி :

அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில்,

கூழம்பந்தல்,

காஞ்சிபுரம் மாவட்டம் – 631701.

போன்: +91 97879- 06582, 04182- 245 304, 293 256.

இறைவன்:

பேசும் பெருமாள்

அறிமுகம்:

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் கூழம்பந்தல் கிராமத்தில் அமைந்துள்ள பேசும் பெருமாள் கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒரே சன்னதி கொண்ட சிறிய கோயில், ஆனால் பெருமாள் பிரம்மாண்டமாகவும் அழகாகவும் இருக்கிறார். இது வயலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு இங்கு நிறுவப்பட்டது. இக்கோயில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று கூறப்படுகிறது. காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி செல்லும் வழியில் கூழம்பந்தல் சுமார் 18 கிமீ தொலைவில் உள்ளது. தற்போது கூழமண்டலம் என்று அழைக்கப்படும் இந்த இடம் கூழம்பந்தல் என்றும் அழைக்கப்பட்டது.

புராண முக்கியத்துவம் :

       இந்த பெருமாள் கோயிலுக்கு விளக்கு எரிக்க 14 பணமும், பதினெண் கல நெல்லும் தெலுங்குச்சோழ மன்னர்கள் வழங்கினர். சூரியன், சந்திரன் உள்ளவரை கோயிலிலுள்ள மூன்று விளக்குகளை இதைக் கொண்டு எரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இவ்வூர் பட்டன் இதனைப் பெற்றுக் கொண்டார். ஆனால், முறையாக கோயிலுக்கு செலவிடவில்லை. மேலும் இவர், இந்த ஊரில் பிறக்கும் பெண் குழந்தைகளைக் கொல்வதற்கு மருந்தும் செய்து கொடுத்துள்ளார். இறந்த குழந்தையை தகனம் செய்தவுடன், அவர்களுக்கு தெளிக்கும் பாலை, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்துள்ளார்.

கோபமடைந்த பெருமாள், பட்டனை அழித்ததுடன், ஊரையும் அழித்து விட்டார். அவரது கோபத்தால் வைகுண்டமே நடுங்கியதாம். பிற்காலத்தில், ஒரு கல்வெட்டு மூலம் இந்தத் தகவலை அறிந்த பெரியவர்கள் பெருமாளிடம் மன்னிப்பு கேட்டு, கோயில் எழுப்பி, சிறந்த முறையில் பராமரித்தனர். தவறைச் சுட்டிக்காட்டியதால் பெருமாளுக்கு பேசும் பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.

நம்பிக்கைகள்:

பேச, நடக்க முடியாத, காதுகேளாத குழந்தைகளுக்காக இந்தக் கோயிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

சிறப்பு அம்சங்கள்:

பேச்சுத்திறமை: பேச, நடக்க முடியாத, காதுகேளாத குழந்தைகளுக்காக இந்தக் கோயிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதற்காக, முதல்நாள் என்ன கிழமையில் செல்கிறோமோ, அதே கிழமையில் ஒன்பது வாரம் குழந்தையுடன் கோயிலுக்கு செல்ல வேண்டும். தேங்காயில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு ஒன்பது முறை கோயிலை வலம் வரவேண்டும். குழந்தையின் முகத்தில் சங்கு தீர்த்தம் தெளிக்கப்படுகிறது. தொடர்ந்து ஒரு வாரத்துக்கான தீர்த்தம் வீட்வீ டில் வைத்து கொடுக்கவும் வழங்கப்படுகிறது.

கூடாரவல்லி திருவிழா: மார்கழி மாதம் பழங்கள், காய்கறிகள், வெட்டிவேர், 108 திரவியங்கள், மூலிகைகள், பூக்கள் மூலம் அமைக்கப்பட்ட பந்தலில் (கூடாரம்) கூடாரவல்லி திருவிழா நடக்கிறது. கூடாரத்தில், ஆண்டாள் நாச்சியார் சேவை சாதிக்கிறாள். அன்று திருப்பாவை பாடப்படும். திருமணத்தடை நிவர்த்தி, கல்வி, செல்வம், வியாபாரஅபிவிருத்திக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த தலத்தில் விரதங்கள், தானம், வேள்வி, பிராயச்சித்தம் எது செய்தாலும், ஆயிரம் மடங்கு தருவதாக நம்பிக்கையுள்ளது. பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில்,வந்து வரம் தருவார் வரதராஜன் என்று பக்தர்கள் உளமார நம்புகின்றனர். பேசும் பெருமாளின் அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, தாமரை மலர் கொண்ட திருக்கையுடைய கோலத்தில் உள்ளனர்.

திருவிழாக்கள்:

            தமிழ்ப்புத்தாண்டு, வைகாசி விசாகம் (15 கிராமங்களின் கருடசேவை), திரு ஆடிப்பூரம், கிருஷ்ணஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, தீபாவளி, விஷ்ணு கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, ஆங்கிலப்புத்தாண்டு, கூடாரவல்லி விழா, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், ரதசப்தமி, மாசி மகம் (108கோ பூஜை), பங்குனி உத்திரம் (திருக்கல்யாணம்) ஸ்ரீ ராமநவமி.

காலம்

1012 – 1044 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கூழம்பந்தல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top