Saturday Jun 15, 2024

கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் (கருக்குடிநாதர்)திருக்கோயில், கருக்குடி, மருதாநல்லூர்-612 402 கும்பகோணம் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 99435 23852

இறைவன்

இறைவன்: சற்குணலிங்கேஸ்வரர் இறைவி: அத்வைதநாயகி

அறிமுகம்

சற்குணலிங்கேஸ்வரர் கோயில் சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 69ஆவது சிவத்தலமாகும். பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 132 வது தேவாரத்தலமாகும். இத்திருத்தலத்தில் எம தீர்த்தம் அமைந்துள்ளது.இத்தலத்தின் மூலவர் சற்குணலிங்கேஸ்வரர், இறைவி அத்வைதநாயகி. இத்தல விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கிய கோயில். கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் சிறியது. மண்ணால் செய்யப்பட்டது. மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் தெரிகிறது. அரையடி உயர சிறிய ஆவுடையார். பீடம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், நவகிரகம், சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், முருகன் உள்ளனர். அம்மன் சன்னதி எதிரே தனஞ்சய வணிகனின் வணங்கிய சிலை உள்ளது.

புராண முக்கியத்துவம்

ராமாயண காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டு வர தாமதமானதால், ராமன் தன் அருகிலிருந்த மணலிலேயே இரண்டு கைகளாலும் லிங்கம் பிடித்து வழிபட்டார் என்றும் அதுவே தற்போதைய பிருதிவி லிங்கமாகும். அனுமன் கொண்டு வந்த லிங்கம் கோயிலின் இடப்புறம் உள்ள அனுமந்த லிங்கம் என்ற பெயரில் உள்ளது. இத்தலத்திற்கு மற்றொரு வரலாறும் உண்டு. தனஞ்சயன் என்ற வணிகன் ஒருவன் தன் சிற்றன்னையை அறியாது புனர்ந்தமையால் தொழுநோய் ஏற்படுகிறது. மனம் வருந்திய அவன் இத்தல இறைவனை வேண்டி தொழுநோய் நீங்கப்பெற்றான்.

நம்பிக்கைகள்

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 132 வது தேவாரத்தலம் ஆகும். சிவன், அம்மன் இருவரும் கிழக்கு பார்த்து திருமண கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். இவ்வூரின் அருகே ஏனாதிநாயனார் அவதரித்த ஏனநல்லூர் உள்ளது. வீணா தட்சிணாமூர்த்தி உள்ளார். பிரம்மா, சற்குணன் என்ற அரசன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். இதனால் இறைவன் சற்குணலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

திருவிழாக்கள்

நவராத்திரி, சிவராத்திரி, கந்தசஷ்டி, சித்திரை திருவிழா, மார்கழி திருவாதிரை

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top