Sunday Jul 21, 2024

உடையாபட்டி ஸ்ரீ கந்தாஸ்ரமம், சேலம்

முகவரி

ஸ்ரீ கந்தாஸ்ரமம், உடையபட்டி, சேலம் மாவட்டம் – 636 140 தொலைபேசி: (0427) 240660 மின்னஞ்சல்: syscon@eth.net

இறைவன்

இறைவன்: ஞானஸ்கந்தர், குருநாதர் இறைவி: கந்தமாதா, பராசக்தி

அறிமுகம்

சேலம் நகரின் அருகில் உடையாபட்டி என்ற இடத்தில், இயற்கை எழில் சூழ்ந்து முற்றிலும் மலைகளுடன் காட்சியளிக்கிறது அருள்மிகு கந்தாஸ்ரமம் திருக்கோயில். ஸ்ரீமத் சாந்தானந்த சரஸ்வதி சுவாமிகள் நெஞ்சத்தில் கனவு போல தோன்றிய, மலைகளும், அருவிகளும் நிறைந்த சிறிய குன்றே இன்று சேலம் அருகில் கந்தாஸ்ரமமாக மாறியுள்ளது. முருகனும், தாயும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. முருகன் சந்நிதியை சுற்றி மனைவியுடன் கூடிய நவகிரகங்களின் விக்கிரகங்கள் உள்ளன. 16 அடி உயர தத்ராத்ரேய பகவான் (குருவருள்) உள்ளார். சொர்ண ஆகர்ஷண பைரவர் இத்தலத்தில் உள்ளார். இத்தலத்தில் உள்ள சங்கடஹர பைரவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்.

புராண முக்கியத்துவம்

1965 ல் இந்த ஆஸ்ரமத்தை நிறுவிய ஸ்ரீ மத் ஸத்குரு சாந்தானந்த சுவாமிகளின் கனவில் வந்த முருகப்பெருமான் தன்னை குறிப்பிட்ட இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யும்படி அருளினார். கனவில் வந்த முருகப்பெருமான் சொன்ன இடத்தை தேடியலைந்த இவர் கடைசியாக இப்போது கந்தாஸ்ரமம் இருக்கும் இடத்தை அடைந்தவுடன் தான் கனவில் கண்ட இடம் இதுதான் என்று கூறி இங்கு முருகனை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார். காலப்போக்கில் பெரிய அளவில் எண்ணற்ற கண்கவர் சிற்பங்களுடன் கூடிய கோயிலாக இந்த ஆஸ்ரமம் கட்டப்பட்டுள்ளது. சேலம் நகருக்கு மிக அருகில் மலைப்பாங்கான இடத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் இந்த கந்தாசிரமம் அமைந்துள்ளது.

நம்பிக்கைகள்

இத்தலத்தில் வழிபட்டால் கல்யாணபாக்கியம், குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. இத்தலத்தில் வணங்கினால் குருவருள் கிடைக்கும். நோயற்ற வாழ்வு(தன்வந்திரி பகவான்),குறைவற்ற செல்வம்(ஸ்வர்ணாகர்ஷன பைரவர்) சங்கடங்கள் தீர (சங்கடஹர கணபதி) பக்தர்கள் வழிபடலாம். இவை தவிர பஞ்சமுக அனுமானை வணங்கி பக்தி, பலம், தைரியம், பூமி செழிப்பு, கல்வி செல்வம் ஆகியவற்றை பெறலாம்.

சிறப்பு அம்சங்கள்

முருகனும் தாயும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. அம்பாள் உயிராகவும்(இதயம்),முருகன் அறிவாகவும்(மூளை) அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த சன்னதிகளை வணங்குவதால் உயிருக்கும் அறிவுக்கும் பலம் உண்டாகிறது. அதனின் பயனாக உயிரான தாயார் சாந்தத்தையும் அறிவான முருகன் ஆனந்தத்தையும் அளிக்கிறார்கள். முருகனை சுற்றிவந்தால் நவகிரக தோஷம் விலகும் என ஜோதிட சாஸ்திரப்படி முருகனைச் சுற்றி மனைவியுடன் சேர்ந்த நவகிரகங்களை பிரதிஷ்டை செய்துள்ளார். பிரதோஷத்தன்று பூஜை செய்வதற்காக நர்மதா நதியிலிருந்து கொண்டு வந்துள்ள பாணலிங்கமான புவனேஸ்வரர் புவனேஸ்வரி முருகன் சன்னிதானத்தில் உள்ளது. வேத விநாயகர், ஆதி சங்கரர் உட்பட பல விக்ரகங்கள் அழகுற மொத்தமாக ஒரே இடத்தில் அமைந்துள்ளது இங்கு மட்டுமே. 16 அடி உயர தத்ராத்ரேய பகவான் (குருவருள்) உள்ளார். சொர்ண ஆகர்ஷண பைரவர் இத்தலத்தில் உள்ளார். இத்தலத்தில் உள்ள சங்கடஹர பைரவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். 4 வேதங்களுக்குரிய உருவங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முருகனும் தாயும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது.

திருவிழாக்கள்

கார்த்திகை தீபம் விசாகம் ஆகியவை ஆசிரமத்தின் சிறப்பான நாட்கள், ஆடி 18 நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

உடையாபட்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

சேலம்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர், திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top