Wednesday Jul 24, 2024

ஆமூர் இறையாயிரமுடையார் கோயில், செங்கல்பட்டு

முகவரி

அருள்மிகு இறையாயிரமுடையார் கோயில், ஆமூர், திருப்போரூர் தாலுக்கா, செங்கல்பட்டு மாவட்டம் – 603 105 தொடர்புக்கு: கவுதம் சிவாசார்யர் – 87541 10281

இறைவன்

இறைவன்: இறையாயிரமுடையார்

அறிமுகம்

திருப்போரூருக்கு அருகில் ஆமூரில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். திருப்போரூர் – திருக்கழுக் குன்றம் சாலையில் சுமார் 7 கி.மீ தொலைவில், சிறுதாவூர் தாண்டியதும் ஆமூர் வரும். அங்கிருந்து இடதுபுறமாக ஊருக்குள் சென்றால் சிவாலயத்தை தரிசிக்கலாம். தெய்வ சாந்நித்தியத்துடன் திகழ்ந்த ஆலயமும் சுற்றுப் பகுதியும் ஆளரவ மற்றுத் திகழ்ந்தன. ஆமூர் – பசுக்களுக்குரிய தலம். ஊரின் பெயருக்கேற்ப நிறைய பசுக்கள் மேய்ந்துகொண்டிருந்ததைக் காண முடிந்தது. ரிஷிகளும் சித்தர்களும் பசு வடிவில் வந்து ஈசனை தரிசித்த தலமாம். தாமரைக் குளம் ஒன்றும் உள்ளது.

புராண முக்கியத்துவம்

ஈராயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படும் ஆலயம் பெரிதும் சிதிலமுற்றுப் போனதாம். 2006-ம் ஆண்டு மெள்ள திருப் பணிகள் தொடங்கப்பட்டு, 2019-ல் கும்பாபி ஷேகம் நடைபெற்றதாம். தற்போது தினமும் ஒருவேளை பூஜையுடன் கோயில் சுத்தமாகவும் அழகாகவும் பராமரிக்கப்பட்டுவருகிறது. ஆனாலும் நிலமட்டத்தைவிட தாழ்ந்து போயிருக்கும் சந்நிதிகளையும் ஆலயம் சுற்றுச் சுவர் இல்லாமல் திகழும் நிலையையும் கண்டு, இன்னும் பல திருப்பணிகள் செய்யவேண்டி யுள்ளதை அறிய முடிந்தது. இத்தனை அதிசயங்களையும் தரிசித்து வியந்த நமக்குள், `இவ்வளவு பெருமைமிக்க இந்த ஆலயத்துக்கு ஏன் கூட்டமே வருவ தில்லை’ என்ற கேள்வியும் எழாமலில்லை. `பிரபலமான கோயில்களுக்கு மட்டுமே செல்வது என்ற மனநிலை மக்களுக்கு மாறினால் ஒழிய, இதுபோன்ற கோயில்கள் பிரபலமாகாது’ என்கிறார்கள் கோயில் குருக்கள்.

நம்பிக்கைகள்

இவரை வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் என நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் ஊர் மக்கள்.

சிறப்பு அம்சங்கள்

இந்தத் திருக்கோயிலில் 10 அதிசயங்கள் உண்டு. அவை, 1. ஈசனின் திருநாமம் இறையாயிரமுடையார். ஆயிரம் பசுக்களால் தொழப்பட்டவர் என்று பொருள். சப்த ரிஷிகள் கூடி, இங்கு ஈசனை வெண்ணெயால் வடிவமைத்து வழிபட் டார்கள் என்கிறது தலவரலாறு. இங்குள்ள ஈசன் வெண்மை நிறத்துடன் அடுக்கடுக்காக ஏழுவித நவநீத ரேகைகளுடன் காட்சிதருகிறார். 2. இங்கு தெற்கு நோக்கி அருளும் அம்பிகை திரிபுரசுந்தரி, வரப்பிரசாதியானவள். இவளை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும். கல்யாண வரம் வேண்டுவோருக்கு விரைவில் நல்ல வரன் அமையும். 3. இங்கு வித்தியாசமாக நின்ற கோலத்தில் தனிச் சந்நிதியில் அருள்கிறார் பிரம்மன். இவரிடம் நம் ஜாதகத்தை வைத்து, நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால், நம் தலையெழுத்து நல்லபடியாக மாறும்; நன்மைகள் விளையும். 4. கோயிலில் அருளும் சிவசூரியன் விசேஷ மானவர். இவரே மற்ற எட்டு கிரகங்களின் சாந்நித்தியத்தையும் தன்னிடத்தில் கொண்டு, சிவ தியானத்தில் ஆழ்ந்திருக்கிறாராம். கிரக தோஷங்களை நீக்கும் மூர்த்தி இவர். 5. ஈசனுக்குப் பின்புறம் அமைந்துள்ள ஜேஷ்டாதேவி மிக மிகப் பழைமையானவள். மாந்தி, குளிகன் சூழ எழுந்தருளியுள்ளாள். இந்த மூத்ததேவியை வணங்கிட, சகல துக்கங் களும் நீங்கி, மன அமைதி உண்டாகும். 6. இங்குள்ள காலபைரவ மூர்த்தம் வளர்ந்து கொண்டிருப்பதாக நம்பிக்கை. மேல் தளத்தைத் திருமுடி தொடும்படி அருளும் இந்தக் காலபைரவரைத் தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது விசேஷம். அதன் பலனாக வீண் விரயங்களும் ஆபத்துகளும் விலகும். 7. பெரும்பாலும் சிவ தியானத்தில் ஆலயங் களில் அருளும் சண்டிகேஸ்வரர், இங்கே விசேஷமாக – ஜடாமுடியுடன் ஆனந்த நிலை யில் அமர்ந்துள்ளார். இவரை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். 8. வெகுகாலமாகப் பட்டுப்போயிருந்த ஆலயத்தின் தலவிருட்சமான சரக்கொன்றை, இங்கு வழிபாடுகள் தொடங்கியதும் மீண்டும் செழித்து வளர்கிறது. ஈசனின் முன்பு வளர்ந்து வரும் இரு சரக்கொன்றை விருட்சங்களும் சித்தர்களின் அம்சம்; பிரம்மனின் ஓம்கார ஜபத்தால் உருவானவை என்பது நம்பிக்கை. 9. சூரனுடனான போரின்போது, சமராபுரி யாகிய திருப்போரூருக்குச் செல்லுமுன் முருகன் வழிபட்ட தலங்களில் ஆமூரும் ஒன்று. இத்தலத்தில் முருகன் தமது திருவடியை ஊன்றிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அவரின் திருவடித் தடம் ஒன்று வழிபாட்டில் உள்ளது. 10. இங்குள்ள பிரம்ம தீர்த்தம் சகல தோஷ – பாவங்களையும் தீர்க்கவல்லது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆமூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

செங்கல்பட்டு

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top