Saturday Jul 27, 2024

அருள்மிகு பைரவேஸ்வரர் திருக்கோயில், சோழபுரம்

முகவரி

அருள்மிகு பைரவேஸ்வரர் திருக்கோயில், NH-36, சோழபுரம் – 612 503

இறைவன்

இறைவன்: பைரவேஸ்வரர் இறைவி: பைரவேஸ்வரி

அறிமுகம்

ஊரெங்கும் இருக்கும் 64பைரவர்களையும் ஒரே சமயம் வணங்குவது சாத்தியமா? சாத்தியம் தான். பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் மூல மூர்த்தியான சிவனே பைரவேஸ்வரர் எனும் பெயரில் கோயில் கொண்டுள்ள தலம்.அது தான் கும்பகோணம்- சென்னை சாலையில் 13கிமி தூரத்தில் உள்ள சோழபுரம். மிகப்பழமையான ஆலயம். இதன் பழைய பெயர் பைரவபுரம். இங்கு ஸ்ரீபைரவேஸ்வரர் என்ற பெயரைத் தாங்கிய சிவலிங்கத் திருமேனியைத் தரிசனம் செய்வதால் பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் மூர்த்தியாக பைரவேஸ்வரராக ஈஸ்வரன் தோன்றிய தலம். இத் தலத்தில் நிறைய மகான்கள் சித்தி அடைந்துள்ளனர். இக்கோவிலில் அஷ்ட புஜ பைரவர் சிலை உள்ளது. பழமை வாய்ந்த சோழர் காலக் கோயிலான இக்கோயிலுக்கு முகப்பு எதுவும் இல்லை. உள்ளே முகப்பு மண்டபத்தின் அடித்தளம் மட்டுமே உள்ளது. இறைவன் பைரவேஸ்வரர் பெரிய லிங்கமாக கம்பீரத்துடன் உள்ளார், இறைவி தெற்கு நோக்கிய நிலையில் உள்ளார். கருவறை வாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் மாடங்களில் உள்ளனர். கருவறை கோஷ்ட்ட தெய்வங்களாக விநாயகர், நடராஜர், கங்காளமூர்த்தி, தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், ஆலிங்கன மூர்த்தி, துர்க்கை, அஷ்டபுஜ பைரவர் ஆகியோர் உள்ளனர்.

புராண முக்கியத்துவம்

இராமாயண காலத்தில் ராவணன் கடுமையாக தவம் இருந்து நவகிரகங்களை கட்டி போட்டான். நவகிரகங்களில் சக்தி வாய்ந்த சனி பகவானும் செய்வதறியாமல் திகைத்தார். இத்தல ஸ்ரீ பைரவேஸ்வரிடம் தன் கடமையை செய்ய உதவி செய்யுமாறு வேண்டினார். இத்தலத்தில் அவருக்கு குளிகன் (மாந்தி ) என்னும் மகன் பிறந்தார். குளிகன் பிறந்த அந்த நேரமே இராவணன் அழிவு காலம் என்று ஸ்ரீ ராமர் போர் தொடுத்து இராவணனை அழித்தார் என்று தல புராணம் சொல்கிறது. பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் இங்கு பைரவ யோக முறையில் தவம் செய்துள்ளார். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும் ஆதிமூலம் இந்த சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் தான். 64 பைரவ வடிவங்களும் தோன்றிய தலம். பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ உபாச சித்தர்களும் ரிஷிகளும், யோகிகளும் அஷ்டமி திதி தினங்களில் கண்களுக்கு தெரியாத வடிவங்களில் இங்கு வந்து பூஜித்து செல்கிறார்கள். தேய்பிறை, அஷ்டமியில் மாலை நேரம் அபிஷேக அலங்காரங்களுடன் வழிபாடு நடத்தப்படுகிறது. தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும். சனிக்கு குருவாக விளங்குபவரர் இந்த பைரவர் தான் அதனால் சனிக்கிழமை சிறப்பு.

நம்பிக்கைகள்

இங்கு 64 பீடங்கள் உள்ளது. இந்த 64 பீடங்களிலும் 64 பைரவர்களும் அமர்ந்து பூஜையும் , தியானமும் செய்வதாக நம்ப படுகிறது. இந்த பைரவரை வழிபட்டால், பித்ரு தோசம், பித்ரு சாபங்களில் பல வருடங்கள் பாதிக்கப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லாமலிருப்பவர்களும், பில்லி, சூன்யம், செய்வினை, ஏவல், மாந்திரீகம் போன்ற பிரச்சினைகளும் அகலும். பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்.

சிறப்பு அம்சங்கள்

இத்தலம் பைரவர், சிவனாகத் தோன்றிய தலம் என்ற பெருமையுடையது. இக்கோயிலின் மூலவர் பைரவேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். லிங்கத் திருமேனியாக உள்ள மூலவர் நான்கடி உயரமுள்ள ஆவுடையார் மீது இரண்டடி உயரமுள்ள பாணத்துடன் உள்ளார். இத்தலம் 64 பைரவ வடிவங்களும் தோன்றிய தலமென்றும், பைரவேஸ்வரர் ஆதிமூலம் என்றும் கூறுவர். அம்மன் சன்னதியில் ஒரு பீடத்தில் அம்மனின் திருமுகம் மட்டும் காணப்படுகிறது.[4] இக்கோயிலில் அஷ்ட புஜ பைரவர் உள்ளார்.

திருவிழாக்கள்

சனிக்கிழமை வழிபாடு இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. அஷ்டமி திதியில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

காலம்

1000 to 2000

நிர்வகிக்கப்படுகிறது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவிடைமருதூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top