ஹம்பி உத்தான வீரபத்திர சுவாமி திருக்கோயில், கர்நாடகா

முகவரி :
ஹம்பி உத்தான வீரபத்திர சுவாமி திருக்கோயில்,
ஹம்பி, பெல்லாரி மாவட்டம்,
கர்நாடகா – 583239.
இறைவன்:
உத்தான வீரபத்திர சுவாமி
அறிமுகம்:
கர்நாடகாவில் பெல்லாரி மாவட்டத்தில் ஹம்பியில் உத்தான வீரபத்திரர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. விஜயநகர பேரரசு காலத்தில் 1545 ஆம் ஆண்டில் தளபதி ஜங்கமய்யா கட்டிய ஆலயம் முத்து வீரண்ண சுவாமி கோயில் என்று அறியப்பட்டு பின் நாட்களில் உத்தான வீரபத்திரர் ஆலயம் என்று வழங்கப்படுகிறது. உத்தான என்றால் உயரமான என்று பொருள்.
புராண முக்கியத்துவம் :
த்ரேதா யுகத்தில் ஸ்ரீராம சீதா தேவியை சேர்த்து வைத்து ஆனந்தித்த அனுமன் தான் பிறந்த இடமான கிஷ்கிந்தைக்கு வருகிறார். அங்கு சிவனை நோக்கி தவம் செய்து வீரபத்திரர் தரிசனம் கிடைக்கப்பெறுகிறார். பின்னாலில் அங்கு ஆலயம் அமைகிறது என்கிறது இவ்வாலய தலபுராணம். ஆலய வளாகத்தில் அனுமனுக்கு தனி சன்னதி உள்ளது.
சிறிய ஆலயத்தின் பிரதான நுழைவாயிலை கடந்த உடன்பிரகாரத்தில் தீப ஸ்தம்பத்தை காணலாம். அங்கு நந்தி தேவரையும் பலிபீடத்தையும் வணங்கலாம். அதன் பின்னர் காலபைரவர் தரிசனமும், அவருக்கு முன்பு சிறிய மண்டபத்தில் ஒரே பீடத்தில் அமர்ந்த மூன்று நந்திகள் தரிசனமும் கிடைக்கிறது. தூண்கள் நிறைந்த முக மண்டபம், அர்த்தமண்டபம் மற்றும் விசாலமான கருவறை கொண்ட ஆலயம். அர்த்தமண்டபத்தில் மேலும் ஒரு நந்தி தேவர் இருக்கிறார். தொடர்ந்து கருவறையில் 16 அடி உயர சதுர்பூஜ வீரபத்திரர் நான்கு கரங்களில் கத்தி, கேடயம், வில், அம்பு ஏந்தி நின்று நிலையில் தரிசனம் தருகிறார்.
நம்பிக்கைகள்:
தினசரி பூஜைகளுடன் விசேஷ பூஜைகளும் நடைபெறுகின்றன. திருமணங்கள் அதிகம் நடைபெறும் திருக்கோயில். இப்பகுதியில் வசிக்கும் பலரின் குடும்பங்களுக்கும் குலதெய்வம். திங்கள் மற்றும் பிரதோஷ நாட்களில் பால் அபிஷேகம், பால் நிவேதனம் மற்றும் வில்வ இலையால் வீரபத்திரரை வழிபடுவது மிகவும் விசேஷம். இதனால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும்.











காலம்
1545 ஆம் ஆண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஹம்பி
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஹோஸ்பேட்
அருகிலுள்ள விமான நிலையம்
ஹூப்ளி