வீரப்பெருமாநல்லூர் வியாக்ரபுரீஸ்வரர் சிவாலயம், கடலூர்

முகவரி
வீரப்பெருமாநல்லூர் வியாக்ரபுரீஸ்வரர் சிவாலயம், வீரப்பெருமாநல்லூர், பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் – 607 101.
இறைவன்
இறைவன்: வியாக்ரபுரீஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி
அறிமுகம்
கடலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லை கிராமமான இந்த வீரபெருமாநல்லூர் பண்ருட்டியின் மேற்கில் 14கிமி தொலைவில் உள்ளது. பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மன்னன் வீரபெருமான் பெயரால் உருவாக்கப்பட்ட ஊராகும். இவ்வூரில் சிவாலயம் ஒன்றும் வைணவ ஆலயம் ஒன்றும் உள்ளது. ஒருகால பூஜையில் நாட்கள் நகர்கின்றது. வயதான முதியவர் ஒருவரே பூசகராக உள்ளார். சிவாலயம் பதிமூன்றாம் நூற்றாண்டை சேர்ந்ததா என அறியமுடியவில்லை, ஆனால் இக்கோயிலில் காணப்படும் சிலைகள் காலத்தால் முற்பட்டவை என அறியலாம். வியாக்ரபாதர் வழிபட்ட தலம் என்பதால் இங்கு இறைவனுக்கு வியாக்ரபுரீஸ்வரர் என பெயர் உள்ளது. இறைவி திரிபுரசுந்தரி தெற்கு நோக்கி உள்ளார்.
புராண முக்கியத்துவம்
கிழக்கு நோக்கிய கோயில் எனினும் பிரதான வாயில் தெற்கில் உள்ளது. ஒரு ஏக்கர் பரப்புடைய கோயில் இறைவன் இறைவி இரு சந்நதிகளையும் மண்டபம் இணைக்கிறது. அதில் பெரிய விநாயகர் ஒன்றுள்ளது. தென்புறம் சப்தமாதர் தொகுப்பு ஒன்றும் பழமையான கோயில் சிலைகள் பலவும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. பிரகாரத்தின் பின் புறம் விநாயகர், முருகன் ஆகியோரின் சிற்றாலயங்கள் உள்ளன. கருவறை கோட்டத்தில் விநாயகர், தென்முகன், விஷ்ணு, பிரம்மன் உள்ளனர். வடபுற மதிலை ஒட்டி பெரிய வன்னி மரமொன்றும் லிங்கமும் உள்ளன. பழமையான சண்டேசர் சிலை தொடைமீது கையிருத்தியவாறு உள்ளது. வடகிழக்கில் நவக்ரக மண்டபம் உள்ளது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வீரப்பெருமாநல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பண்ருட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி