விக்கிரபாண்டியம் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி :
விக்கிரபாண்டியம் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்,
விக்கிரபாண்டியம், மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614708.
இறைவன்:
அகத்தீஸ்வரர்
இறைவி:
சௌந்தர்யநாயகி
அறிமுகம்:
இவ்வூரில் இரு சிவன் கோயில்களும், ஒரு பெருமாள் கோயிலும் உள்ளன. ஒரு சிவாலயம் கிழக்கு நோக்கியதாகவும், மற்றொரு கோயில் மேற்கு நோக்கியதாகவும் உள்ளது. முதலில் பெருமாள் கோயில் தெருவில் இருக்கும் அகத்தீஸ்வரர் கோயிலை சென்று பார்ப்போம். பெருமாள் கோயிலை ஒட்டிய பகுதியில் தான் இந்த சிவன் கோயில் உள்ளது. இக்கோயில் மேற்கு நோக்கிய கோயில் என்றாலும் தெரு தெற்கில் இருப்பதால் தென்புற வழியே பெரியதாக பிரதானமாக உள்ளது. இறைவன்- அகத்தீஸ்வரர் இறைவி – சௌந்தர்யநாயகி. அகத்தியர் வழிபட்ட தலம் என்பதால் இந்த பெயர் வந்துள்ளது. இப்பகுதியில் பல அகத்தீஸ்வரர் லிங்கங்கள் உள்ளன என்பது ஆச்சரியமான ஒன்று.
மேற்கு நோக்கி இறைவன் கோயில் கொண்டுள்ளார். அவரின் முன்னம் ஒரு மண்டபம் உள்ளது, அதில் நடராஜர் சபையும் இணைந்துள்ளது, மண்டபத்தின் வெளியில் நந்தி பலிபீடம் தனி மண்டபத்தில் உள்ளனர். அம்பிகை தெற்கு நோக்கியவர். தென்புற வாயில் வழி உள்ளே வந்ததும் இடதுபுறம் விநாயகரின் சிற்றாலயம் உள்ளது பிரகார வலமாக வரும்போது வடபுறம் பெரிய சிற்றாலயமாக முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். இறைவன் கருவறை கோட்டத்தில் லட்சுமி துர்க்கை எனும் ஒரு துர்க்கை உள்ளார், சங்கு சக்கரத்துடன் இருப்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம். தென்புறம் தென்முகன் கோஷ்டத்தில் உள்ளார். பிரகாரத்தில் வடகிழக்கில் சற்று தள்ளியே உள்ளது பைரவர், சூரியன் மற்றும் சண்டேசர் சன்னதிகள், அது ஏனென்று தெரியவில்லை.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”









காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
விக்கிரபாண்டியம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி