Friday Dec 27, 2024

வானதிராஜபுரம் பாணபுரீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி

வானதிராஜபுரம் பாணபுரீஸ்வரர் சிவன் கோயில், பாபகோலம், வானதிராஜபுரம், மயிலாடுதுறை வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 812

இறைவன்

இறைவன்: பாணபுரீஸ்வரர்

அறிமுகம்

மயிலாடுதுறை- கல்லணை சாலையில் சோழம்பேட்டை அடுத்த ஊர் வானதிராஜபுரம் பிரதான சாலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ள தெருவின் வடக்கில் உள்ளது பெரிய திடல் ஒன்று அதில் கிழக்கு நோக்கியவாறு உள்ளது கோயில் முகப்பினை அடைத்தவாறு உள்ளது பிரம்ம கணபதி சிற்றாலயம்..அதன் காரணம் தெரியவில்லை. வாமனர் இவ்வூரில் தங்கியிருந்து காவேரி ஸ்நானம் செய்து சில நாட்கள் தபசு மேற்கொண்டதால் வாமன ராஜபுரம் எனப்பெயர் பெற்றது. பாணன் சிவனை பூஜித்து ஆயிரம் கைகளை பெற்ற தலம். இவ்வூர் ஸ்நான கட்டத்திற்க்கு பாணதீர்த்தம் என்று பெயர். இவர் பூஜித்த லிங்கம் பாணலிங்கம் எனப்பட்டது. இக்காரணத்தினால் பாணதிராஜபுரம் எனப்பட்டது. காஞ்சி பத்ரகோளன் என்பவன் பிறவி குருடன் சத்யாஷாட ரிஷியினுடைய அனுக்கிரகத்தால் இவ்வூரில் ஸ்நானம் செய்து வழிபட்டதால், சிவன் அருளால் கண் பெற்ற தலம். ஆகையால் கிருஷ்ணபக்ஷம் சதுர்த்தசி அன்று லட்சுமி நாராயணர் பாணலிங்கம் இவர்களுக்கு அபிஷேகம் செய்து தரிசனம் செய்தால் பெரும் பேறுகள் கிட்டும். கணபதி ஆலயத்தின் பின்புறம் கிழக்கு நோக்கியவாறு வரிசையாக பிரம்மபுரீஸ்வரர், சுப்பிரமணியர், பாணபுரீஸ்வரர் சன்னதிகள் அதனை ஒட்டி தெற்கு நோக்கி பாலாம்பிகை சன்னதி கருவறை கோட்டத்தில் தென்முகனும், துர்க்கையும் உள்ளனர். சண்டேசர் தனி சன்னதியில் வடபுறத்தில் உள்ளார். வடகிழக்கில் சிறிய பைரவர் திருமேனி உள்ளது. கோயிலின் வடக்கில் பெரிய குளம் உளது. கோயிலின் தென்புறம் தனியாக பெரியதொரு நந்தி மேற்கு நோக்கியபடி உள்ளது. இந்த நந்தி திருஆய்ப்பாடியில் கிழக்கு நோக்கி உள்ள இறைவனை நோக்கியபடி உள்ளது என்கின்றனர், செயற்கை கோள் உதவியுடன் பார்த்தால் இது சரியென்றே தோன்றுகிறது ஆனால் காரணம்???? # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வானதிராஜபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top