மாப்படுகை சந்திரசேகரர் திருக்கோயில், மயிலாடுதுறை

முகவரி :
மாப்படுகை சந்திரசேகரர் திருக்கோயில்
மாப்படுகை, மயிலாடுதுறை வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609003.
இறைவன்:
சந்திரசேகரர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
மயிலாடுதுறை – கல்லணை சாலையில் உள்ள தொடர்வண்டி இருப்புகதவுகளை தாண்டினால் வலதுபுறம் உள்ளது மாப்படுகை என அழைக்கப்படுகிறது. மாப்படுகை பண்டாரவாடை, சோழம்பேட்டை, ராமாபுரம் இவை அனைத்தும் சேர்த்து சோழம்பேட்டை என்றே அழைக்கப்படுகிறது.
இங்குள்ள மாப்படுகை அரசு உயர்நிலை பள்ளி இருக்கும் லட்சுமிநாராயணபெருமாள் கோயில் தெருவில் சந்திரசேகரர் கோயில் உள்ளது. சந்திரன் வழிபட்ட தலம் என்பதால் சந்திரசேகரர் எனப்படுகிறார். சிறிய நடுத்தர அளவிலான கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. கிழக்கில் ஒரு வாயிலும், தென்புறம் ஒரு வாயிலும் உள்ளன. பெரும்பாலும் தெற்கு வாயிலே உபயோகத்தில் உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கிய கருவறையும் இறைவி விசாலாட்சி தெற்கு நோக்கிய கருவறையும் கொண்டுள்ளார். ஒரு அழகிய முகப்பு மண்டபம் இரு கருவறைகளையும் இணைக்கிறது, இந்த மண்டபத்தின் வெளியில் நந்தி தனி மண்டபத்தில் உள்ளார்.
கருவறை கோட்டத்தில் தென்முகன் மட்டும் உள்ளார். பிரகார சிற்றாலயங்களாக பிரதானவிநாயகர் அடுத்து வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளார். அடுத்து சிறிய மகாலட்சமி சன்னதியும் உள்ளது அருகில் ஒரு வெள்ளெருக்கு பெரிதாக வளர்ந்து நிற்கிறது. வடக்கில் கருவறை கோட்ட தெய்வமாக துர்க்கையுள்ளர். வடகிழக்கில் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் தன் மனைவியை மடியில் இருத்தியவாறு உள்ளார். இவரை அஷ்டமி நாட்களில் வழிபடுதல் சிறப்பு, அடுத்துள்ள சன்னதியில் சனி மற்றும், சூரியன் உள்ளனர். காலை மாலை என இருவேளைகள் பூஜைகள் நடைபெறுகின்றன. மாதந்திர விசேஷங்களும் நடைபெற்று வருகின்றன.,









காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மாப்படுகை
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி