மணக்குடி சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி
மணக்குடி சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், மணக்குடி கிராமம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 001
இறைவன்
இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி : சௌந்தரநாயகி
அறிமுகம்
மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் ஐந்தாவது கிமி ல் உள்ளது மணக்குடி எனும் சிறு கிராமம். இங்கு பிரதான சாலையின் வடக்கில் உள்ளது இக்கோயில். மேற்கு நோக்கிய கோயிலாக இருந்தாலும் கிழக்கிலும் ஒரு வாயில் உள்ளது. சுதை வளைவு கொண்ட மேற்கு வாயில் இக்கோயில் தருமபுர மடத்தின் கோயிலாகும். இறைவன் மேற்கு நோக்கியும் அம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். சிறு இணைப்பு மண்டபம் இரு சந்நதிகளையும் இணைக்கிறது. விநாயகர், முருகன் மகாலெட்சுமி சன்னதிகள் கிழக்கு நோக்கிட தெற்கு நோக்கிய நடராஜர் இருப்பிடம் காலியாக உள்ளது. கருவறை கோட்டங்கள் இல்லை. பிரகார மதில் சுவர் இடிந்து சரிந்துள்ளது.இரண்டாம் பிரகாரமான நந்தவன சுற்று புதர்மண்டி கிடக்கிறது. குடமுழுக்கு கண்டு ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மணக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி