புளிச்சக்காடு சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி
புளிச்சக்காடு சிவன்கோயில், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 111
இறைவன்
இறைவன்: புளிச்சக்காடு சிவன்கோயில்
அறிமுகம்
சீர்காழியில் இருந்து ஆர்ப்பாக்கம் செல்லும் சாலையில் இரண்டு கிமி தூரம் சென்றால் உள்ளது புளிச்சக்காடு கிராமம். இதற்க்கு நித்தியவனம் என ஒரு பெயரும் உண்டு. முன்பு பெரிய கோயிலாக இருந்து பின்னர் முற்றிலும் சிதைந்து மறைந்த கோயில்களில் ஒன்று தான் இந்த புளிச்சகாடு கோயில். புளிச்சான் கொடிகள் நிறைந்த வனம் என்பதால் புளிச்சகாடு என ஆனது. இங்கு பிரதான சாலையை ஒட்டி ஒரு பெரிய குளம் உள்ளது அதன் கரையில் ஒரு தகர கொட்டகையில் இருக்கிறார் எம்பெருமான். தற்போது இருப்பது ஒரு பெரிய லிங்கமும் அதனோடு உள்ள ஒரு விநாயகரும். விநாயகர் பெரும் கருங்கல் பாளம் ஒன்றில் செதுக்கப்பட்டுள்ளார். காலசக்கரம் சுழலும்போது காட்சிகளும் மாறும். காத்திருப்போம். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புளிச்சக்காடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
