பிள்ளைபனங்குடி ராஜராஜேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :
பிள்ளைபனங்குடி ராஜராஜேஸ்வரர் சிவன்கோயில்,
பிள்ளைபனங்குடி, நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611002.
இறைவன்:
ராஜராஜேஸ்வரர்
இறைவி:
ராஜராஜேஸ்வரி
அறிமுகம்:
பனங்குடி இரு ஊர்களாக உள்ளது, பிள்ளைபனங்குடி சன்னாசி பனங்குடி எனவும் உள்ளது. பிள்ளைபனங்குடி பிரதான தேசியநெடுஞ்சாலை NH67-யை ஒட்டி உள்ளது. திட்டசேரியில் இருந்து 4 கிமீ தொலைவிலும், நாகூர்/வாஞ்சூர் முக்குட்டில் இருந்து 6 கிமீ தொலைவிலும் உள்ளது. பிரதான சாலையில் இருந்து பிரியும் இடத்தில் கோயிலின் அலங்கார வளைவு உள்ளது. இங்கு ஊரின் முகப்பில் பெரிய குளத்தின் மேற்கு பகுதியில் கிழக்கு நோக்கிய சிவன் கோயில் ஒன்றுள்ளது, பழமையான கோயில் சிதைவடைந்த பின் புதுக்கோயிலாக உருவானது இக்கோயில். இறைவன் ராஜராஜேஸ்வரர் இறைவி ராஜராஜேஸ்வரி
இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் கருவறை கொண்டுள்ளனர். இறைவனின் முன்னம் ஒரு நீண்ட மண்டபம் அமைந்துள்ளது. அதன் வெளியில் தனி மண்டபத்தில் நந்தி உள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகன் உள்ளார். பிரகார சிற்றாலயங்களாக விநாயகர், முருகன், லக்ஷ்மி மூவருக்கும் கோயில்கள் உள்ளன. வடகிழக்கில் நவகிரகங்கள் ஒரு எண்கோண மண்டபத்தில் உள்ளன. பைரவர் சிறிய மாடத்தில் உள்ளார். கோயிலின் எதிரில் ஒரு பெரிய குளம் உள்ளது அதனை ஒட்டி அரசமரத்தடியில் ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி ஒரு மண்டபத்தில் உள்ளார். அமர்ந்த நிலையில் ஆஞ்சநேயர் எனபது சிறப்பு. கோயில் குருக்களின் வீடு குளத்தின் அருகிலேயே உள்ளது.












காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பிள்ளைபனங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி