தேன்பாக்கம் ஸ்ரீ பசுபதீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி
தேன்பாக்கம் ஸ்ரீ பசுபதீஸ்வரர் சிவன்கோயில், தேன்பாக்கம் , சித்தாமூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 301.
இறைவன்
இறைவன்: ஸ்ரீ பசுபதீஸ்வரர் இறைவி: ஸ்ரீ பார்வதி தேவி
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த தேன்பாக்கம் கிராமம். பழமைவாய்ந்த இந்த சிவாலயம் அச்சரபாக்கம் அருகில் 2 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. ஆலய முகப்பில் இருபுறமும் ஸ்ரீ விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன. இறைவன் ஸ்ரீ பசுபதீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அம்பாள். ஸ்ரீ பார்வதி தேவி. கோஷ்டத்தில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார். அஷ்டபுஜ துர்க்கை வடிவம் மண்ணில் பாதி புதைந்த நிலையில் காணப்படுகிறது. சண்டிகேஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன. ஆலயம் சீர் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. தொடர்புக்கு திரு வேணுகோபால் 8870504451, திரு ஆதிமூலம் 9585620921.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தேன்பாக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மேல்மருவத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை
