Friday Sep 20, 2024

திருவாரூர் விருப்பாட்சிஈஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :

திருவாரூர் விருப்பாட்சிஈஸ்வரர் சிவன்கோயில்,

திருவாரூர் வட்டம்,

திருவாரூர் மாவட்டம் – 610001.

இறைவன்:

விருப்பாட்சிஈஸ்வரர்

அறிமுகம்:

கர்நாடகாவின் ஹம்பியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட விஜயநகர மன்னர்களின் காவல் தெய்வம் விருபாக்ஷா. ருத்ரனின் வடிவங்களுள் ஒன்றானது, விருபாக்ஷா என்றால் முக்காலமும் உணரும் மூன்றாவது கண் என்று அர்த்தம். அவர்களின் அரசியல் சாசனங்களில்கூட விருபாக்ஷா என்ற பெயரில்தான் கையொப்பம் இடப்படுமாம். நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்த இடங்களில் விருப்பாக்ஷ ஈஸ்வரர் கோயில்கள் எழுப்பப்பட்டன. ஆயினும் தமிழக விருப்பாட்சீஸ்வரர் கோயில்களில் லிங்க மூர்த்தங்களே காணப்படுகின்றன. அப்படி நாயக்கர்களால் உருவான ஒரு கோயில் தான் திருவாரூர் பெருங்கோயிலின் வடக்கில் சில நூறு மீட்டர் தூரத்தில் உள்ளது.

இக்கோயில் இருக்கும் தெருவின் பெயர் விருப்பாட்சி நடப்பு தெரு, மேற்கு நோக்கிய கோயில், இன்று நாம் காணும் கோயில் புதியதாக மாற்றியமைக்கப்பட்டதாக இருக்கும் என தோன்றுகிறது. கோயிலை ஒட்டி வடக்கில் பெரிய குளம் ஒன்று விருப்பாட்சி குளம் என உள்ளது. முகப்பு வாயில் மேல் கோபுரம் காட்டப்பட்டுள்ளது. இருபுறமும் சிறு மாடங்களில் விநாயகர் மற்றும் பாலமுருகன் உள்ளனர். இறைவன் விருப்பாட்சீஸ்வரர் மேற்கு நோக்கி கருவறை கொண்டுள்ளார், இறைவி – தெற்கு நோக்கி உள்ளார். அவரது கருவறை வாயிலில் சிறியதாக இரு விநாயகர்கள் உள்ளனர்.

இறைவன் முன்னர் உள்ள சதுரமான அர்த்த மண்டபத்தில் நான்கு மூலைகளிலும் நான்கு பெரிய லிங்க மூர்த்திகள் உள்ளனர். இது குறித்து சரியாக அறிந்து கொள்ள இயலவில்லை. இந்த மண்டபத்தின் வெளியில் பெரிய துவாரபாலகர்கள் இருவர் உள்ளனர். அர்த்த மண்டபத்தின் முன்னர் ஒரு மகாமண்டபம் உள்ளது, அதில் தாங்கும் நான்கு தூண்களில் நான்கு நாயன்மார்கள் சிலைகள் சிமெண்டால் வடிக்கப்பட்டுள்ளன. இறைவன் நேர் எதிரே அழகிய நந்தி உள்ளார். இந்த மகாமண்டபத்தில் தென்மேற்கில் விநாயகர் மற்றும் வடமேற்கில் முருகன் உள்ளனர். கருவறையை சுற்றி வரும்போது விநாயகர் துர்க்கை, லிங்கோத்பவர் உள்ளனர். சண்டேசர் நவகிரகம், பைரவர் தனித்தனி சன்னதி கொண்டுள்ளனர்.தென் புறம் சில உடைந்த சிலைகளும் உள்ளன.

காலம்

500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருவாரூர்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top