திருக்குரக்குக்கா குந்தளேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி
அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில் , திருக்குரக்கா-609 201, மயிலாடுதுறை தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 4364 – 258 785.
இறைவன்
இறைவன்: குந்தளேசுவரர் இறைவி: குந்தளாம்பிகை
அறிமுகம்
திருக்குரக்குக்கா (திருக்குரக்காவல் குந்தளேஸ்வரர் கோயில்) பாடல் பெற்ற தலங்களுள் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 28வது சிவத்தலமாகும். அப்பர் பாடல் பெற்றது. இச்சிவாலயம் இந்தியாவில் தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. அனுமன் சிவனை வழிபட்டதாக நாயன்மார் கூறினாலும் , இக்கதை புராணங்களிலும் இதிகாசங்களிலும் இல்லாததால் மற்றும் வேதத்துக்கு முரணாக இருப்பதால் , அனுமன் சிவனை வழிபட வாய்ப்புகள் இல்லை. இக்கோயிலிலுள்ள இறைவன் குந்தளேஸ்வரர், இறைவி குந்தலாம்பிகை.
புராண முக்கியத்துவம்
சேதுக்கரையில் (ராமேஸ்வரம்) சிவபூஜை செய்ய எண்ணிய ராமர், லிங்கம் கொண்டுவரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். ஆஞ்சநேயரும் லிங்கம் எடுத்து வரச் சென்றார். இதனிடையே, சீதாதேவி கடல் மணலில் லிங்கம் சமைக்கவே, ராமர் அந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அதன்பின்பு லிங்கத்துடன் வந்த ஆஞ்நேயர், ராமர் சிவபூஜை செய்துவிட்டதை அறிந்து கோபம் கொண்டார். மேலும், மணல் லிங்கத்தை தனது வாலால் உடைக்க முயன்றார். முடியவில்லை. சிவ அபச்சாரம் செய்ததால் மன்னிப்பு வேண்டிய அவர் இத்தலத்தில் சிவபூஜை செய்தார். அப்போது சிவனுக்கு மலருடன், தான் காதில் அணிந்திருந்த குண்டலத்தையும் படைத்து வணங்கி மனஅமைதி பெற்றார். ஆஞ்சநேயர் குண்டலம் வைத்து வழிபடப்பட்டவர் என்பதால், இத்தல சிவன் “குண்டலகேஸ்வரர்’ என்றும் பெயர் பெற்றார்.
நம்பிக்கைகள்
கால்நடைகள் வைத்திருப்போர் செல்லியம்மனை வேண்டிக் கொண்டால் அவை நோயின்றி இருக்கும் என்பது நம்பிக்கை. புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் குந்தளநாயகி அம்பாளுக்கு வளையல் அணிவித்து வேண்டிக் கொள்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
சிவ ஆஞ்சநேயர் ஆஞ்சநேயர் சன்னதி, சிவன் சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ளது. திருமால், ராமாவதாரம் எடுத்தபோது, அவருக்கு உதவுவதற்காக சிவனே ஆஞ்சநேயராக வந்தார். எனவே, ஆஞ்சநேயர் சிவஅம்சம் ஆகிறார். அவ்வகையில் இத்தலத்தில் சிவனே, தன்னை வழிபடும் கோலத் தில் இருப்பதாக சொல்கிறார்கள். எனவே இவரை, “சிவஆஞ்சநேயர்’ என்றும், “சிவபக்த ஆஞ்சநேயர்’ என்றும் அழைக்கிறார்கள். இவரே இத்தலத்தில் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது. சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது கலியுக அதிசயமாகும். சிறப்பம்சம் அம்பாள் குந்தளநாயகி தனிச் சன்னதியில் அருளு கிறாள். வில்வம் இத்தலத்தின் விருட்சம். திருநாவுக்கரசர் இத்தலம் குறித்து பதிகம் பாடியுள்ளார். இக் கோயிலில் தெட்சிணாமூர்த்தி சற்று வலதுபுறமாக திரும்பியுள்ளார்.
திருவிழாக்கள்
சிவராத்திரி, திருக்கார்த்திகை, அனுமன் ஜெயந்தி.
காலம்
1000-2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருக்குரக்குக்கா
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி