தட்டாம்பாளையம் பிரகதீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி :
தட்டாம்பாளையம் பிரகதீஸ்வரர் சிவன்கோயில்,
தட்டாம்பாளையம், பண்ருட்டி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 607106.
இறைவன்:
பிரகதீஸ்வரர்
இறைவி:
பிரகன் நாயகி
அறிமுகம்:
பண்ருட்டியின் வடக்கில் நான்கு கிமீ தூரத்தில் உள்ள ராஜபாளையம் வந்து கிழக்கில் செல்லும் பட்டாம்பாக்கம் சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்று மீண்டும் வடக்கில் இரண்டு கிமீ தூரம் சென்றால் இந்த தட்டாம்பாளையம் அடையலாம். தட்டாம்பாளையம் சற்று பெரிய கிராமம், பல வகையான கோயில்கள் உள்ளன ஊருக்குள், பெரியதொரு நில பரப்பில் பெரிய வளாகத்தில் ஐயனார் கோயில் உள்ளது இதே வளாகத்தில் தற்போது லிங்க பிரதிஷ்டை ஆகி உள்ளது. இறைவன் பிரகதீஸ்வரர் இறைவி- பிரகன் நாயகி தனித்த லிங்கமாக பல காலமாக இருந்த இவருக்கு இன்று ஒரு பெரிய தகர கொட்டகையில் அம்பிகை விநாயகர் முருகன் சனைச்சரன், நவகிரகங்கள், தென்முகன் மற்றும் துர்க்கை துணையாக உள்ளனர். நேர் எதிரில் கொட்டகையின் வெளியில் நந்தியும் பலிபீடமும் உள்ளன. லிங்க மூர்த்தியை தவிர அனைத்து மூர்த்தங்களும் புதிதாக உருவாக்கப்பட்டவை. புதிய திருக்கோயில் கொண்டுள்ள இறைவன் ஊர் மக்களின் அன்பிற்கு உரியவராக மாறியுள்ளார். ”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”












காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தட்டாம்பாளையம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி