செம்பியன்ஆத்தூர் தம்பிரான்சுவாமி சிவன்கோயில், நாகப்பட்டினம்
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/289587754_7617560011650376_2699524631963501246_n.jpg)
முகவரி :
செம்பியன்ஆத்தூர் தம்பிரான்சுவாமி சிவன்கோயில்,
செம்பியன்ஆத்தூர், கீழ்வேளுர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611105
இறைவன்:
தம்பிரான்சுவாமி
இறைவி:
தாட்சாயணி
அறிமுகம்:
திருவாருரின் கிழக்கில் உள்ள கீவளூரில் இருந்து தேவூர் செல்லும் பிரதான சாலையில் இலுப்பூர்சத்திரம் என ஒரு நிறுத்தம் உள்ளது, இங்கிருந்து மேற்கில் ஆத்தூர்,இலுப்பூர் வழியாக 5 கிமீ தூரம் சென்றால் உள்ளது செம்பியன்ஆத்தூர். இவ்வூர் கடுவையாற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. சிறிய கிராமம் ஊரின் மையத்தில் சிறிய கோயிலாக உள்ளது சிவன்கோயில். முற்றிலும் புதிதாக கட்டப்பட்டுள்ளது அதனால் இது சிதைவடைந்த கோயிலின் புதிய வடிவம் என்றே சொல்லவேண்டும். நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாயக்கர் கால கூம்பு வடிவ மண்டபங்களுடன் கலைநயமான விமானம் கொண்டு இருந்த சிவாலயங்கள் புதிய திருப்பணி என்ற பெயரில் சாதாரண பிள்ளையார்கோயில் போல ஆகிவிட்டன என்பது வருத்தமான ஒன்று.
இறைவன் தம்பிரான்சுவாமி கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். அவற்றின் முன்னர் ஒரு முகப்பு மண்டபம் கட்டப்பட்டுள்ளது அதில் கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் முருகன் உளள்னர். இறைவி தாட்சாயணி அதிலேயே தெற்கு நோக்கிய ஒரு மேடையில் அமர்ந்துள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர் பிரம்மன் உள்ளனர். சண்டேசர் இல்லை. கருவறையின் நேர் பின்புறம் தல மரத்திற்கு புடவை சுற்றி அதனை தெய்வமாக வழிபடுகின்றனர்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/289587754_7617560011650376_2699524631963501246_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/289989957_7617560194983691_2944872782557352245_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/290113354_7617559998317044_106514680216121121_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/290532492_7617560451650332_998962417324000336_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/290823704_7617559968317047_3100379004056429802_n-771x1024.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செம்பியன்ஆத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி